சென்னை: தமிழ்நாடு அரசு பேருந்துகளில் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு டிக்கெட் கட்டணம் இல்லை என அரசிதழில் வெளியிடப்பட்டு இருக்கிறது. தமிழ்நாடு அரசு பேருந்து 3 வயது வரையிலான குழந்தைகளுக்கு பல ஆண்டுகளாக டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படுவது கிடையாது. அதேபோல் பள்ளி மாணவர்களுக்கும் பஸ் பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் 60 வயதுக்கும் அதிகமான முதியோர்கள் ...

உலகம் முழுவதும் உள்ள அனைத்து மக்களுக்கும் கவர்ச்சிமிக்க, மற்றும் ஜொலிக்கக்கூடிய பொருட்கள் என்றாளே மிகவும் பிடித்தமான ஒன்று. அந்த வரிசையில் வைரம் போன்ற விலையுயர்ந்த பொருள் இருந்தாலும் மக்கள் பெரும்பாலும் விரும்புவது தங்கம் தான். தங்கத்தை நகைகளாக அணிவது மட்டுமல்லாமல் அதில் முதலீடு செய்து தேவையான நேரத்தில் அதனை பயன்படுத்திக் கொள்கின்றனர். இத்தகைய தன்மை கொண்ட ...

மறைந்து முதல்வரும் தி.மு.க தலைவருமான கருணாநிதிக்கு மெரினா கடற்கரையில் ஒரு நினைவிடம் கட்டவேண்டும் என்று தி.மு.க அரசு அறிவித்த நாள் முதல் தொடர்ந்து எதிர்ப்புகளை சந்தித்து வருகிறது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் கே.கே. ரமேஷ் என்பவர் பேனா நினைவுச்சின்னம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மனுதாக்கல் ஒன்றை செய்துள்ளார். தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த மு.கருணாநிதிக்கு சென்னை ...

ஆஸ்திரேலியா சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு பிரதமரை இந்தியாவிற்கு தீபாவளி கொண்டாட வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். மாநாட்டிற்காக ஜப்பான் சென்ற இந்திய பிரதமர் மோடி அங்கிருந்து பப்புவா நியூ கினியா உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் செய்தார். அங்கிருந்து ஆஸ்திரேலியா சென்ற பிரதமர் அங்கு நடைபெற்ற ஆஸ்திரேலியா வாழ் இந்தியர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில்பங்கேற்றார். அவருடன் ஆஸ்திரேலிய ...

ஆஸ்திரேலியாவில் இந்தியா்கள் அதிகமாக வசிக்கும் ஹாரிஸ் பூங்கா பகுதியில் ‘குட்டி இந்தியா’ என்ற நட்புறவு நினைவுச் சின்னத்தை அமைப்பதற்குப் பிரதமா் மோடியும் ஆஸ்திரேலிய பிரதமா் ஆன்டனி ஆல்பனேசியும் செவ்வாய்க்கிழமை அடிக்கல் நாட்டினா். ஆஸ்திரேலியாவில் வசித்து வரும் இந்திய சமூகத்தினா் அந்நாட்டின் வளா்ச்சிக்குப் பெரும் பங்காற்றி வருகின்றனா். அதைப் போற்றும் வகையிலும் இரு நாடுகளுக்கு இடையேயான நல்லுறவைச் ...

சென்னை போக்குவரத்து காவல்துறை போக்குவரத்து விதிகளை மதித்து நடப்பதற்கும் மோட்டார் வாகன சட்டத்தை பின்பற்றுவதற்கும் தொடர்ந்து வாகன ஓட்டிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியும் வாகனத்தணிக்கை, அபராதம் விதிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக சமூக வலைதளங்கள் மூலம் அதிக அளவில் சாலை விதிமீறல்கள் ஈடுபடுதல் தொடர்பாக புகார்கள் சென்னை போக்குவரத்து காவல்துறைக்கு வர தொடங்கியுள்ளது. அவ்வாறு அளிக்கப்படும் புகார்களுக்கு ...

பிரதமர் மோடி ஜப்பான், பப்புவா நியூ கினியா பயணத்துக்குப் பின்னர் நேற்று ஆஸ்திரேலியா தலைநகர் சிட்னி சென்றடைந்தார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பை ஆஸ்திரேலியா வாழ் இந்தியர்கள் அளித்து இருந்தனர். இன்று இந்திய வம்சாவழியினர் இடையே மோடி மற்றும் ஆஸ்திரேலியா பிரதமர் ஆண்டனி அல்பானீஸ் இருவரும் சிட்னியில் பேசினர். சிட்னியில் குடோஸ் பாங்க் பகுதியில் நடந்த ...

சென்னை புழல் மத்திய சிறை வளாகத்தில் நேற்று 23.05.23 பிற்பகல் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி நீதியரசர் T.ராஜா தலைமையில் உயர்நீதிமன்ற நீதியரசர்கள் எம்.சுந்தர், நீதியரசர் ஜி.கே.இளந்திரையன் மற்றும் நீதியரசர்  ஜி.சந்திரசேகரன் ஆகியோர் சிறைக்கு வருகை தந்தனர். உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அவர்களால் சிறையில் புதிதாக கட்டப்பட்டுள்ள சிறைவாசிகள் காத்திருப்பு அறை திறந்து வைக்கப்பட்டது. சிறையினுள் ...

கோவை மாவட்டத்தில் இயங்கும் தனியார் பள்ளிகளில் அரசு விதிமுறைகளின் படி பதினோராம் வகுப்பு மாணவர் சேர்க்கையை நடத்திட உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கொங்குநாடு அருந்ததியர் முன்னேற்ற பேரவை சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் இன்று பதினோராம் வகுப்பு மாணவர் சேர்க்கை துவங்கப்பட்ட நிலையில் பல்வேறு இடங்களில் மாணவர்கள் காலையிலிருந்து ...

கோவை உக்கடம் பகுதியைச் சேர்ந்த வினோத் மாநகராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் சரவணவேலு மற்றும் சாதனாதேவி இருவரும் நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். சாதனாதேவி பத்தாம் வகுப்பு அவினாசிலிங்கம் மேல்நிலைப் பள்ளியிலும், அதேபோல அவரது மகன் சரவண வேலு ராமலிங்க செட்டியார் பள்ளியில் படித்துள்ளனர்.பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் ...