தொடர் உயர்வு… தங்கம் விலை சவரன் ரூ.45,000-த்தைக் கடந்து விற்பனை..!

உலகம் முழுவதும் உள்ள அனைத்து மக்களுக்கும் கவர்ச்சிமிக்க, மற்றும் ஜொலிக்கக்கூடிய பொருட்கள் என்றாளே மிகவும் பிடித்தமான ஒன்று.

அந்த வரிசையில் வைரம் போன்ற விலையுயர்ந்த பொருள் இருந்தாலும் மக்கள் பெரும்பாலும் விரும்புவது தங்கம் தான்.

தங்கத்தை நகைகளாக அணிவது மட்டுமல்லாமல் அதில் முதலீடு செய்து தேவையான நேரத்தில் அதனை பயன்படுத்திக் கொள்கின்றனர். இத்தகைய தன்மை கொண்ட தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கத்தை கண்டு வருகிறது. அந்தவகையில், இன்று தங்கம் விலை ஏற்றத்தைக் கண்டுள்ளது.

அதன்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.20 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.5,665-க்கும், சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.45,320 -க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும், நேற்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.5,645-க்கும், சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.45,160-க்கும் விற்பனையானது. இதனைத்தொடர்ந்து, சென்னையில் வெள்ளியின் விலை 50 காசுகள் குறைந்து, ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.77.50-க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.500 குறைந்து ரூ.77,500-க்கும் விற்பனையாகிறது.