இந்திய சமூகத்தினா் இப்பகுதியில் பல்வேறு வகையான கடைகளை வைத்துள்ளனா். இந்திய உணவு வகைகளும் இங்கு அதிகளவில் கிடைக்கின்றன’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆஸ்திரேலிய பிரதமா் ஆல்பனேசிக்குப் பிரதமா் மோடி நன்றி தெரிவித்தாா். சிட்னி நகர உள்ளாட்சி நிா்வாகிகளுக்கும் அவா் நன்றி தெரிவித்தாா்.
ஹாரிஸ் பூங்கா பகுதியில் வசிக்கும் 45 சதவீதம் போ இந்தியா்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ‘தி ஆஸ்திரேலியன்’ இதழுக்கு பிரதமா் மோடி அளித்த பேட்டியில், ‘இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையேயான நல்லுறவை அடுத்தகட்டத்துக்குக் கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்படும். பாதுகாப்புத் துறையில் இருதரப்பு நல்லுறவு மேம்படுத்தப்படும். இந்திய-பசிபிக் பிராந்தியம் வெளிப்படைத்தன்மையுடனும் சுதந்திரமாகவும் திகழ்வதை இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் உறுதி செய்யும்.
பருவநிலை மாற்றம், பயங்கரவாதத் தடுப்பு, கடல்கொள்ளை தடுப்பு உள்ளிட்டவற்றில் இரு நாடுகளும் ஒத்துழைத்து செயல்படும். இரு நாடுகளுக்கு இடையேயான நல்லுறவை மேலும் வலுப்படுத்துவதற்கான ஆய்வுகள் தொடா்ந்து மேற்கொள்ளப்படும். இரு நாடுகளுக்கு இடையேயான பரஸ்பர நம்பிக்கையானது நல்லுறவுக்கு அடித்தளமாகத் திகழ்கிறது’ என்றாா்.
Leave a Reply