பெங்களூர்: கர்நாடகாவில் சித்தராமையா தான் 5 ஆண்டு முதல்வராக இருப்பார் என அமைச்சர் எம்பி பாட்டீல் பேசியது பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தான் கர்நாடகா காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார், மல்லிகார்ஜூன கார்கேவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆட்சியில் இருந்து விலகி இருக்கும் சூழல் ஏற்படும் என மிரட்டிய தகவல் பரபரப்பை ஏற்படுத்தி ...
கோவில்பட்டியை அடுத்த தேசிய நெடுஞ்சாலை பகுதியில் நின்று கொண்டிருந்த லாரியின் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்தனர். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே மதுரை-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த டிப்பர் லாரியின் மீது அதிவேகத்தில் வந்த இருசக்கர வாகனம் மோதியது. வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே ...
சைவ மடங்களுள் ஒன்றாக மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனம் அருளாட்சியில் 27 திருக்கோயில்கள் உள்ளன. அதில் தருமையாதீனத்தைச் சுற்றி நான்கு திசைக்கும் அருள் புரிகின்ற பெரும் தெய்வங்களாக மேற்கே சரபமூர்த்தியும், வடக்கே சட்டைநாதரும், கிழக்கே கால சம்ஹார மூர்த்தியும், தெற்கே வீரபத்திரரும் அரணாகத் திகழ்கின்றார்கள் என்பது வரலாறு. அதில், திருஞானசம்பந்தர் அவதாரத் தலமான சீர்காழியில் அமைந்திருக்கும் ஸ்ரீ ...
வெப்ப சலனம் காரணமாக, 24.05.2023 முதல் 26.05.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.27.05.2023 மற்றும் 28.05.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு ...
மிக பிரமாண்டமாகவும் அதி நவீனமாகவும் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் சிறப்பு அம்சங்கள் குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்ப்போம். இந்தியாவின் வரலாற்று சின்னங்களில் மிக முக்கியமான ஒன்று நாடாளுமன்றம். 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த நாடாளுமன்ற கட்டடத்தில் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எந்த மாற்றமும் செய்ய முடியாது என்பதால், அதற்கு பதிலாக புதிய கட்டடம் ...
ஒன்பது நாள் சுற்றுப்பயணமாக சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்குப் பயணப்பட்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். அந்த நாடுகளில் தொழிலதிபர்களைச் சந்தித்து முதலீடுகளை தமிழகத்துக்கு ஈர்ப்பது குறித்து பல சந்திப்புகளை நடத்தவிருக்கிறார். வெளிநாடுவாழ் தமிழர்கள் ஏற்பாடு செய்திருக்கும் நிகழ்ச்சிகளிலும் முதல்வர் பங்கேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. சுற்றுப்பயணம் செல்வதற்காக, இன்று மே 23-ம் தேதி, சென்னை விமான நிலையத்துக்கு வந்த முதல்வரை ...
பெங்களூரு: பெங்களூரில் புதிய ஆஸ்திரேலிய துணைத் தூதரகம் விரைவில் திறக்கப்படும் என அந்நாட்டு பிரதமர் ஆண்டனி அல்பானீஸ் கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் இந்திய தூதரகம் திறக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி நேற்று அறிவித்த நிலையில், அல்பானீஸ் இன்று மேற்குறிப்பிட்டவாறு கூறியுள்ளார். குவாட் உச்சி மாநாட்டின் கூட்டங்கள் தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டம் ...
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் தொழில் நிறுவனங்களுடன் ஆலோசனை மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்தார். தமிழகத்துக்கு வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், அரசு சார்பில் 2024 ஜனவரியில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட உள்ளது. இதில் பங்கேற்குமாறு முதலீட்டாளர்களை சந்தித்து அழைப்பு விடுக்கவும், புதிய முதலீடுகளை ஈர்க்கும் விதமாகவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மே ...
தமிழகத்தில் கோடை வெய்யில் உச்சத்தில் இருப்பதால் கோடை விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என்று பெற்றோர்களும், கல்வியாளர்களும் வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில், திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்திருக்கிறார். தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில், கோடையின் உக்கிரம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இன்னும் ஒரு ...
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள கணபதி சுந்தர நாச்சியார்புரத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 36). இவர், அப்பகுதி மலையடிவாரப்பகுதியில் நேற்று மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து மாலையில் மாடுகளை வீட்டிற்கு அழைத்து செல்லுகையில் 3 மாடுகளை காணவில்லை எனக் கூறப்படுகிறது. எனவே தன்னுடைய நண்பர்கள் சிலரை உடன் அழைத்துக்கொண்ட மாரியப்பன், மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் ...













