கோவை: ரஷ்யாவை சேர்ந்தவர் பெர்லின் ஷெரில் ( வயது 38 )இவர் போதை பொருள் கடத்தல் வழக்கில் திருச்சி போலீசாரால் கைது செய்யப்பட்டார் .இந்த நிலையில் போலீசார் அவரை விசாரணைக்காக ஆஜர்படுத்த கோவையில் உள்ள  நீதிமன்றத்திற்கு நேற்று காலை அழைத்து வந்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் நிறுத்தி இருந்தனர். பிற்பகல் 2 மணி அளவில் அவர் ...

கோவை : கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சைனி குருடோபெல் (வயது 29)இவர் கோவை பேரூர் அருகே உள்ள பச்சாபாளையத்தில் தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். அந்த கல்லூரி குடியிருப்பில் தங்கி உள்ளார்.நேற்று முன்தினம் ( 12ஆம் தேதி) சொந்த ஊரான கடலூருக்கு சென்று விட்டு கோவைக்கு வந்தார். பின்னர் தனியார் கால் டாக்சியை முன்பதிவு ...

அரிசி உணவில் எவ்வளவு சுவையாக உள்ளதோ அவ்வளவு ஆபத்தும் உள்ளது” என வேளாண்மை மற்றும் உழவர்நலன் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் அமைப்பு 2023 ஆம் ஆண்டினை சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக அறிவித்துள்ளது. சர்வதேச சிறுதானிய ஆண்டிற்கான மையப்பயிராக தமிழ்நாட்டில் கேழ்வரகை தேர்வு செய்யப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் கேழ்வரகு அதிகமாக பயிரிடுவதால் ...

தனது வீட்டில் நடைபெறும் அமலாக்கத்துறை சோதனை குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி.. தமிழ்நாட்டில் சென்னை, கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை பசுமை வழிச்சாலையில் அமைச்சரின் அரசு இல்லம், கரூரில் உள்ள அமைச்சரின் பூர்விக வீட்டிலும் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி ...

சென்னை: “இந்தியத் திருநாடே வியந்து பார்த்த வீரம் மிக்க தலைவரை, பாரதி கண்ட புதுமைப் பெண்ணாம் ஜெயலலிதாவையும், அவருடைய ஆட்சியையும் தரக்குறைவாக அண்ணாமலை விமர்சித்திருப்பது கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை என்ற பழமொழியைத்தான் நினைவுபடுத்துகிறது” என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சரமாரியாக சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அகில உலகத் தமிழர்கள் போற்றும் ...

சென்னை: தமிழக அரசு துறையில் சீனியாரிட்டி அடிப்படையில் மட்டுமே ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.. இதனால் 5 லட்சம் ஊழியர்கள் பதவி இறங்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.. என்ன காரணம்? தமிழக அரசு பணிகளில் இட ஒதுக்கீடு அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. இதில் ஒவ்வொரு ஜாதியினரும் வேலையில் சேர்ந்த ...

புதுடில்லி : ஒடிசாவின் பாலசோரில் நடந்த ரயில் விபத்து தொடர்பாக, ஸ்டேஷன் மாஸ்டர் உட்பட ஐந்து ரயில்வே ஊழியர்களிடம் விசாரணை நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.ஒடிசாவின், பாலசோர் மாவட்டத்தில் உள்ள பாஹாநகர் ரயில் நிலையம் அருகே ஜூன் 2ம் தேதி மூன்று ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்ட விபத்தில், 288 பேர் உயிரிழந்தனர். ...

சண்டிகர்: ஹரியானாவில், சூரியகாந்தி விதைகளை அம்மாநில பாஜக அரசு குறைந்தபட்ச ஆதார விலையில் கொள்முதல் (MSP) செய்ய வேண்டும் என்று கூறி டெல்லிக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலையை மறித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஹரியானா மாநிலத்தில் முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இம்மாநிலத்தின் விவசாயிகள் சூரியகாந்தி விதைகளை ...

டெல்லியில் பைக் டாக்சிகள் இயங்க இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.. விதிமுறைகளை மீறி செயல்படுவதாக கூறி பைக் டாக்சிகள் இயங்க மே 5ஆம் தேதி டெல்லி அரசு தடை விதித்தது. இதனை எதிர்த்து ரேபிடோ உள்ளிட்ட நிறுவனங்கள் சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய ...

தென்கிழக்கு அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த பிபர்ஜாய் புயலானது குஜராத் மாநிலம் கட்ச் மற்றும் பாகிஸ்தானின் கராச்சி இடையே ஜூன் 15ஆம் தேதி கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக குஜராத் மாநிலத்தின் கடலோரப் பகுதிகளில் மக்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் புயல் கரையை ...