தஞ்சை பெரியக் கோவிலை கட்டிய மாமன்னன் இராஜராஜ சோழன் 1038ம் ஆண்டு சதய விழாவை முன்னிட்டு பந்தல் கால் நடும் விழா.!

தஞ்சை பெரியக் கோவிலை கட்டிய மாமன்னன் இராஜராஜ சோழன் 1038ம் ஆண்டு சதய விழாவை முன்னிட்டு. பந்தல் கால் நடும் விழா வெகு சிறப்பாக  நடைப்பெற்றது.
தஞ்சை பெரியக் கோவிலை எழுப்பிய மாமன்னன் இராஜராஜ சோழன் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில் பிறந்தார்.  அவரது பிறந்த நாள் ஆண்டுதோறும் சதய விழாவாக அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, 1038ம் ஆண்டு சதயவிழா வருகிற 24 மற்றும் 25 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இதனை ஒட்டி,  தஞ்சை பெரியக் கோவில் வளாகத்தில் பந்தல் கால் நடும் விழா நடைப்பெற்றது. சிவப்பு, வெள்ளை வர்ணம் பூசப்பட்ட பந்தல் காலுக்கு பால்  தயிர். சந்தனம், இளநீர், மஞ்சள்பொடி உள்ளிட்ட பல்வேறு அபிஷேகப் பொருட்களை  கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டன. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஒத, ஒதுவார்கள் திருமுறை பாட தீப தூப ஆராதனையும், மகா தீபாராதனையும் காண்பிக்கப்பட்டு பந்தல் கால் நடப்பட்டன.
இவ்விழாவில் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே. சதய விழாக்குழு தலைவர் து.செல்வம், உதவி ஆணையர் கவிதா உள்பட பக்தர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.