தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் பலரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக பொறுப்பு வகித்து வந்த செந்தில் ராஜ், தமிழ்நாடு மாநில தொழில் மேம்பாட்டுக் கழகத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும், செங்கல்பட்டு சார் ஆட்சியராக பணிபுரிந்து வந்த லட்சுமிபதி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.