பூந்தமல்லியில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள போதை மாத்திரைகள், 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் – 4 ரவுடிகள் கைது..!

பூந்தமல்லி : ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் ஒரு கும்பல் பூந்தமல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கல்லூரி மாணவர்களையும் பள்ளி மாணவர்களையும் போதைப் பழக்கத்தில் சிக்கிவிட ரவுடிகள் முழு முயற்சியில் ஈடுபடுவதாக கிடைத்த தகவலின் பேரில் பூந்தமல்லி பஸ் நிலையம் அருகே போலீசார் மாறுவேடத்தில் கண்காணித்துக் கொண்டிருந்தபோது tn12 aq 7518 என்ற நீல நிற பஜாஜ் பல்சர் பைக்கில் tn 13 y 1303 என்ற டியோ ஆரஞ்சு பைக்கிலும் ஆகாஷ் வயது 23 தகப்பனார் பெயர் பெரியசாமி வள்ளலார் தெரு முகப்பேர் மேற்கு சென்னை மாறன் வயது 22 தகப்பனார் பெயர் பிரம் ஆனந்த் மூன்றாவது பிளாக் பாலமுருகன் கோயில் தெரு முகப்பேர் சென்னை சீ னு ராஜ் வயது 19 தகப்பனார் பெயர் சேகர் அம்மன் கோயில் தெரு ரெட்டிபாளையம் முகப்பேர் மேற்கு சென்னை ஆனந்த் வயது 19 தகப்பனார் பெயர் ராஜா இரண்டாவது பிளாக் பால் பூத் முகப்பேர் மேற்கு சென்னை ஆகிய நான்கு பேரும் இரண்டு மோட்டார் சைக்கிளில் அதி வேகமாக வந்த போது மோட்டார் சைக்கிள் சக்கரத்தின் உள்ளே உருட்டு கட்டையை சொருக்கி தடுமாற செய்தனர். தடு மாறிய குற்றவாளிகள் கையை தூக்கி எங்களை ஒன்றும் செய்து விடாதீர்கள் என காலில் விழுந்து கதறினார் பூந்தமல்லி போலீஸ் இன்ஸ்பெக்டர் கிளாஸ் டின் டேவிட் கை துப்பாக்கியை காண்பித்து உங்களை ஒன்றும் செய்ய மாட்டேன் பையில் இருக்கும் பொருட்களை என்னிடம் கொடுத்து விடுங்கள் என கேட்கவே பயந்து போன குற்றவாளிகள் நிட் றாவே ட் 10 மில்லி கிராம் கொண்ட ஒரு அட்டையில் 30 மாத்திரைகள் வீதம் மொத்தம் 124 அட்டைகள் வைத்திருந்தனர் இந்த மாத்திரைகள் அதிக போதை கொடுக்கும் மாத்திரைகள் கல்லூரி மாணவர்களும் பள்ளி மாணவர்களும் மாத்திரை உபயோகப்படுத்திய பின் நாகப்பாம்பை பிடித்து கைகளிலும் நாக்கிலும் பாம்பை தீண்ட செய்வார்கள் .  பிடிபட்ட மாத்திரைகளின் மொத்த மதிப்பு ரூபாய் 2 லட்சம் இந்த மாத்திரை கிடைக்கவில்லை என்றால் தலையை சுவற்றில் முட்ட செய்வார்கள். தூக்கு கயிற்றில் தொங்குவார்கள் .இந்த போதை மாத்திரைகளை ஹைதராபாத்தில் இருந்து கொள்ளை லாபம் சம்பாதிக்க வாங்கி வருவார்கள் மொத்தமாக 3720 மாத்திரைகள் இருந்ததை போலீசார் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். மேலும் குற்றவாளிகள் நான்கு பேரையும் போலீஸ் பாதுகாப்புடன் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்