புதுடெல்லி: குடியுரிமை திருத்தச் சட்டத்தால் முஸ்லிம்களுக்கு பாதிப்பில்லை அதனால் முஸ்லிம்கள் அச்சட்டத்தை எதிர்க்காமல் வரவேற்க வேண்டும் என்று அனைத்திந்திய முஸ்லிம் ஜமாத் தலைவர் மவுலானா ஷஹாபுதீன் ராஸ்வி பரில்வி வலியுறுத்தியுள்ளார். சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்தசட்டம் நேற்று (திங்கள் கிழமை) உடனடியாக அமலுக்குவந்த நிலையில் அவர் இக்கருத்தினைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘இந்திய ...

பாஜக கூட்டணியில் தமாகா, சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதி கட்சி, இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்நிலையில், ஓபிஎஸ் அணி, டிடிவி தினகரனுடன் நேற்று பாஜக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 10.30மணி அளவில் ...

சென்னை: தமிழகத்தில் போதை பொருள் புழக்கம் அதிகரித்துள்ள நிலையில், இனியாவது திமுக அரசு விழித்துக் கொண்டு நடவடிக்கை எடுக்குமா என்று பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர், தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தபிறகு, போதை பொருட்கள் புழக்கம் கிராமங்கள் உட்பட தமிழகத்தின் அத்தனை பகுதிகளிலும் அதிகரித்துள்ளது. இதன் உச்சமாக, ...

சென்னை: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள், அவர்களின் மீன்பிடி படகுகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து மத்திய அமைச்சருக்கு அவர் நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: இலங்கை கடற்படையினர், கடந்த மார்ச் 10-ம் தேதி 2 வெவ்வேறு சம்பவங்களில் மூன்று ...

புதுடெல்லி: சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்தசட்டம் நேற்று உடனடியாக அமலுக்குவந்தது. இதுதொடர்பான அறிவிப்பாணையை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பரில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ) நிறைவேற்றப்பட்டது. பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் மதரீதியாக துன்புறுத்தப்பட்டு 2014 டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பு இந்தியாவில் அடைக்கலம் ...

மொரிஷியஸ் நாட்டின் தேசிய தின விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதில் சிறப்பு விருந்தினராக திரெளபதி முர்மு பங்கேற்கிறார். இந்திய கடற்படையின் முதல் பயிற்சிப் படைப்பிரிவின் இரண்டு கப்பல்கள் – ஐஎன்எஸ்-டைர் மற்றும் சிஜிஎஸ் சாரதி ஆகியவற்றுடன் இந்திய கடற்படையின் ஒரு குழுவும் கொண்டாட்டத்தில் பங்கேற்கிறது. இந்த பயணத்தின் போது மொரிஷியஸ் அதிபர் பிரித்விராஜ்சிங் ரூபன் மற்றும் ...

திருவனந்தபுரம்: கேரளாவில் சிஏஏ சட்டம் அமல்படுத்தப்படாது என்றும், இந்த விவகாரத்தில் கேரளா ஒன்றுபட்டு நிற்கும் எனவும் முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டமானது (சிஏஏ) மசோதாவாக கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் 11ம் தேதியன்று நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு சட்டமாக நிறைவேற்றப்பட்டது. இதற்கு அடுத்த நாளே குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்திருந்தார். இதனையடுத்து ...

தமிழ்நாட்டில் பிறை தெரிந்ததை அடுத்து, இன்று முதல் ரமலான் நோன்பு தொடங்கப்படும் என்று தலைமை ஹாஜி அறிவித்துள்ளார். ரமலான் பண்டிகைக்கு முன்பாக இஸ்லாமியர்கள் ஒரு மாத காலம் நோன்பு இருப்பது மரபு.நோன்பு காலத்தில் இஸ்லாமியர்கள் சஹர் எனப்படும் விடியலுக்கு முன்பாக உணவு சாப்பிட்டு விட்டு பிறகு சூரியன் மறையும் வரை உணவு உண்ணாமல் நோன்பு இருப்பார்கள். ...

கோவை கரும்புக்கடை பக்கம் உள்ள புட்டு விக்கி ரோட்டில் ஒரு கோவில் பின்புறம் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக கரும்பு கடை போலீசுக்கு தகவல் வந்தது .இன்ஸ்பெக்டர் தங்கம், சிறப்பு இன்ஸ்பெக்டர் கோபிநாதன் ஆகியோர் அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு பணம் வைத்து சீட்டு விளையாடியதாக செல்வபுரம் வடக்கு ஹவுசிங் யூனிட் சேர்ந்த ...

திருச்சியில் திமுக அரசை கண்டித்து திருச்சி சிந்தாமணி சாலையில் நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்திற்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வருகை தந்தார். ஆர்ப்பாட்டத்திற்கு முன்னதாக திருச்சி மாவட்ட ஆட்சியர் சாலையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது அமமுகவின் நிபந்தனையற்ற ஆதரவை நான் பாஜகவிற்கு கொடுத்திருக்கிறேன். நரேந்திர மோடி தான் பிரதமராக ...