கிராம நிர்வாக அதிகாரியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் தேடப்பட்ட மாத இதழ் ஆசிரியர் கைது – பெண் உதவியாளருக்கு வலைவீச்சு.!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள பனைமரத்துபாளையத்தை சேர்ந்தவர் கருப்புசாமி (வயது 38) இவர் திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள கணக்கம்பாளையத்தில் கிராம நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்து வந்தார். இதற்கிடையில் கடந்த 23ஆம் தேதி கருப்பசாமி திடீரென்று விஷ மாத்திரைகளை தின்றுவீட்டின் மொட்டை மாடியில் தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக அவர்எழுதி வைத்திருந்த கடிதத்தில் கிராம உதவியாளர் சித்ரா, மாத இதழ் ஆசிரியர் மணியன் ஆகியோர்தான் தன் தற்கொலைக்கு காரணம் என்று குறிப்பிட்டு இருந்தார். அதன் அடிப்படையில் கருப்பசாமியை தற்கொலைக்கு தோன்றியதாக சித்ரா மற்றும் மணியன் ஆகியோர் மீது கோமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர் அவர்களை கைது செய்ய கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவு பிறப்பித்தார். இதன் போல் பொள்ளாச்சி போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் தலைமையில் கோமங்கலம் இன்ஸ்பெக்டர் ராஜதுரை மற்றும் பொள்ளாச்சி தாலுகா இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் அடங்கிய 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தேனி மாவட்டம் லோயர் கேம்ப் பகுதியில் தலைமறைவாக இருந்த மாத இதழ் ஆசிரியர் மணியனை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர் .அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்..