கோவை வெள்ளியங்கிரி மலையில் தொடரும் துயரம்: மேலும் ஒருவர் முதல் மலையில் மூச்சுத் திணறி மரணம் – இந்த ஆண்டு 9 பேர் உயிரிழப்பு!!!

கோவை வெள்ளியங்கிரி மலையில் தொடரும் துயரம்: மேலும் ஒருவர் முதல் மலையில் மூச்சுத் திணறி மரணம் – இந்த ஆண்டு 9 பேர் உயிரிழப்பு

 

கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் தென்கைலாயம் என அழைக்கப்படும் வெள்ளியங்கிரி கோவில் அமைந்து உள்ளது. ஏழு மலைகளை தாண்டி சுயம்பு வடிவில் இருக்க கூடிய சிவலிங்கத்தை தரிசிக்க ஆண்டு தோறும் லட்சக் கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து வருகின்றனர். பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று 28.4.2024 ம் தேதி பிற்பகல் சுமார் 12 மணி அளவில் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 10 நபர்கள் வந்து அடிவாரத்தில் தரிசனம் முடித்து பூண்டி மலை ஏற சுமார் 12 மணிக்கு தொடங்கினார். ஒன்றாவது மழை ஏறும் போது சுமார் 1 மணி அளவில் 200 படிக்கட்டுகள் ஏறிய போது திடீரென புண்ணியகோடிக்கு வயிற்று வலிக்கிறது என்றும் கழிவறை செல்ல வேண்டும் என்றும் வாந்தி எடுத்து உள்ளார். உடன் இருந்தவர்கள் கீழே அழைத்து வந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் மாலை 5 மணிக்கு ஆலந்துறை பகுதியில் உள்ள பூலுவபட்டி அரசு மருத்துவமனையில் சோதனை செய்த போது ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இது குறித்து ஆலந்துறை காவல் துறைக்கு தகவல் தெரிவித்து உடலை கைப்பற்றிய காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.