குழந்தைகளுக்கு தமிழ் பெயர் வைப்பதில் அரசியல் பார்க்க வேண்டாம்- கவிப்பேரரசு வைரமுத்து வேண்டுகோள். நாளை கவிப்பேரரசு வைரமுத்துவிற்கு 70 ஆம் ஆண்டு பிறந்த நாள் கோவையில் கொண்டாடப்பட உள்ளது. அவர் திரை உலகிற்கு வந்து 50 ஆண்டுகள் ஆன நிலையில் அவரது பிறந்த நாளை “வைரமுத்து இலக்கியம் 50” என கோவை கொண்டாடப்பட உள்ளது. இந்நிகழ்ச்சி ...

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்று வருகிறது. இதுவரை 200க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறுகுட்டியிடம் மூன்றாவது முறையாக தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.ஏற்கனவே கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் முன்னாள் எம்.எல்.ஏ ஆறுகுட்டியிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் ...

கோவை சவுரிபாளையம் பகுதியை சேர்ந்தவர் சிங்கார வேலன். தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இவர் இன்று கோவை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- எனது மகன் சவுரி பாளையம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு முடித்துள்ளார். அதனை அடுத்து அரசு கல்லூரியில் சேருவதற்கு விண்ணப்பிக்க, டி.சி தேவைப்படுகிறது. ...

கோவையில் பல்வேறு பகுதிகளில் சிக்னல்களில் பெண்கள் மற்று முதியவர்கள் கைக்குழந்தைகளுடன் வந்து யாசகம் பெற்று வருகின்றனர். இதனால் சில நேரங்களில் சிக்னல்களில் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இதில் சிலர் முகம் சுழிக்கும் வகையில் நடந்து கொள்வதாகவும் புகார் எழுந்தது. இதனை தடுக்க கோவை போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக ஆட்கடத்தல் தடுப்பு மற்றும் ...

பதிவுத்துறையில் 100 நாளில் ரூ.4,988 வருவாய் கிடைத்துள்ளதாக தமிழக அரசு அறிவிப்பு. தமிழகத்தில் 575 சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ள நிலையில்,பதிவுத் துறையில் மூலம் பத்திரப் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில்,தமிழகத்தில் பதிவுத்துறையில் கடந்த ஏப்ரல் 1 முதல் ஜூலை 12 ஆம் தேதி வரை ரூ.4,988.18 கோடி  வருமானம் கிடைத்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. குறிப்பாக,இதற்கு ...

சென்னை: நேற்று அமைப்புச் செயலாளர் பொன்னையன் பேசியதாக கூறப்படும் ஆடியோ ஒன்று இணையத்தில் வெளியானது. இதில் அவர் குறிப்பிட்டதாக வெளியான சில விஷயங்கள் அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவியை கைப்பற்ற எடப்பாடி பழனிச்சாமி பணம் கொடுத்ததாக பொன்னையன் பேசிய ஆடியோ நேற்று இணையம் முழுக்க வைரலானது. கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ...

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு கடந்த 24 மணி நேரத்தில் 16,906 ஆக பதிவாகியுள்ளது. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 16,678 ஆக பதிவாகிய நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் 16,906 ஆக பதிவாகியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,30,713 ...

கோவை:காற்றாலையில் இருந்து ஒரே நாளில், 12 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தியானது. கடந்த ஆறு மாதங்களில், 6,000 கோடி யூனிட் மின் உற்பத்தியாகியுள்ளது.அகில இந்திய காற்றாலை மின் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் கஸ்துாரி ரங்கையன் கூறியதாவது:தமிழகத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு மின் உற்பத்தி, ஏப்., 22 முதல் அதிகரித்து வந்துள்ளது. அதிகபட்சமாக ஜூலை மாதத்தில் ஒவ்வொரு ...

தமிழக சட்டமன்ற எதிர்கட்சி துணைத்தலைவராக ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். அவர் வகித்து வந்த பொருளாளர் பதவி திண்டுக்கல் சீனிவாசனுக்கு வழங்கப்பட்டது. இதற்கிடையில் அடுத்த சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அந்த வரிசையில் தற்போது அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதனை நியமிக்க அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ...

2017 -2018 ஆம் வருடத்திற்கான அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1060 விரிவுரையாளர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்ய ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. இதனையடுத்து விண்ணப்பம் செய்தவர்களுக்கு 2021 டிசம்பர் 8ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை கணினி வழி தேர்வு நடத்தப்பட்டது. அதன் மூலம் தேர்வு முடிவுகள் ...