அரசு பள்ளி மாணவர்கள் கோரிக்கையை நிறைவேற்றிய தன்னார்வலர்கள்
கடந்த வாரம் கொடிசியா வர்த்தக அரங்கில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியரின் போலாம் ரைட் நிகழ்ச்சியில் ஒத்தக்கால் மண்டபம் அரசு பள்ளி மாணவ மாணவிகள் தங்கள் பள்ளியில் செயல்பட்டு வரும் அறிவியல் மையத்திற்கு சிறப்பு கருவிகளும் தொலைநோக்கியம் தேவைப்படுவதாக மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்திருந்தனர். இந்நிலையில் அதற்குண்டான தொகைக்கான காசோலையினை மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் அப்பள்ளி மாணவர்களிடம் தன்னார்வலர்கள் வழங்கினர். மேலும் கோவை ஆஸ்ட்ரோ கிளப் சார்பில் 5 செயற்கை முப்பரிமான கருவி (Virtual Reality) அப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் வழங்கினார்.
இந்நிகழ்வில் முதன்மை கல்வி அலுவலர் பூபதி மாவட்ட கல்வி அலுவலர் ரமேஷ் பேராசிரியர் சக்திவேல் பள்ளி ஆசிரியர் நாகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அரசு பள்ளி மாணவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற தேவையான தொகையினை வழங்கிய தன்னார்வலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் நன்றி தெரிவித்துள்ளார்.
Leave a Reply