கோவை பீளமேட்டில் யுனிவர்சல் டிரேடிங் சொல்யூஷன் என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது .இதன் நிர்வாக இயக்குனராக ரமேஷ், இயக்குனர்களாக கனகராஜ் ,ஜஸ்கர் மற்றும் பொது மேலாளராக சுனில் குமார் (வயது 41) ஆகியோர் இருந்தனர். இந்த நிலையில் இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் பல மடங்கு மாற்றி தருவதாக கூறினார்கள். இதை நம்பி அந்த நிறுவனத்தில் 75 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் ரூ. 1300 கோடி வரை முதலீடு செய்தனர். ஆனால் இந்த நிறுவனத்தினர் கூறியவாறு முதலீடு செய்தவர்களுக்கு பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. எனவே இந்த மோசடி குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கடந்த 2019 ஆம் ஆண்டு கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிர்வாக இயக்குனர், ரமேஷ் . இயக்குனர்கள் கனகராஜ், ஜஸ்கர், ஆகிய 3 பேரை கைது செய்தனர். இதில் தலைமறைவாக இருந்த பொது மேலாளர் சுனில் குமாரை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று சுனில் குமாரை போலீசார் கைது செய்தனர்
பின்னர் அவர் தமிழ்நாடு முதலீட்டாளர் நல பாதுகாப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் (டான் பிட்) ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
Leave a Reply