கோவை புத்தகத் திருவிழாவில் அறிவியல் செயல்முறை விளக்க காட்சியினை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்து கலந்துரையாடினார்

கோவை புத்தகத் திருவிழாவில் அறிவியல் செயல்முறை விளக்க காட்சியினை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்து கலந்துரையாடினார்

கோவை கொடிசியா வளாகத்தில் மாவட்ட நிர்வாகம் கொடிசியா தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் இணைந்து புத்தகத் திருவிழா நடத்தி வருகின்றனர். 31 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த புத்தக திருவிழாவில் பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பள்ளி மாணவ மாணவியர்களுக்கான நேரடி அறிவியல் செயல்முறை விளக்க காட்சியை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்து கலந்துரையாடினார்.

இந்நிகழ்ச்சியில் LMSE அகாடமி சார்பில் 1700 பள்ளி மாணவ மாணவியர்களுக்கு நேரடி அறிவியல் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் ராக்கெட் எவ்வாறு செயல்படுகிறது அதன் எடைக்கும், பறக்கின்ற வேகத்திற்கும் உள்ள தொடர்பு போன்ற அறிவியல் சம்பந்தமான பல்வேறு செயல்முறைகள் விளக்கமாக விவரிக்கப்பட்டது. மேலும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ மாணவியர்களுக்கு ஒரு அறிவியல் செயல் விளக்க கருவிகள் அடங்கிய பெட்டிகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் ஏ.வி. தொழில் குழுமத் தலைவர் டாக்டர் வரதராஜன் கோயமுத்தூர் புத்தகத் திருவிழா தலைவர் விஜய் ஆனந்த், துணை தலைவர் ரமேஷ் கிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.