பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் மாலை நேர தர்ணா போராட்டம்
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் மாலை நேர தர்ணா போராட்டம் மேற்கொண்டனர்.
அந்த போராட்டத்தில் “புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத்தை வழங்க வேண்டும், காலியாக உள்ள அரசு பணிகளை உடனடியாக நிரப்ப வேண்டும், அகவிலைப்படி, 21 மாத நிலுவைத் தொகை ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும், மதிப்பூதியம், தொகுப்பு ஊதியம் முறையில் பணியாற்றும் சத்துணர்வு ஊழியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், எம் ஆர் பி செவிலியர், கிராமப்புற நூலகர், வருவாய் கிராம உதவியாளர் உட்பட அனைவருக்கும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை முறைப்படுத்தி ஆணை வழங்கிட வேண்டும், போராட்ட காலத்தில் பாதிக்கப்பட்ட நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் பிரச்சினைகளை களைந்திட வேண்டுதல் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர்(பொறுப்பு) ஜெகநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் அச்சங்கத்தை சார்ந்த சுமார் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
Leave a Reply