தமிழகத்தில் உள்ள பள்ளிகள் அனைத்திலும் மார்ச் 20 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற இருப்பதால் மார்ச் 19 ஆம் தேதி விடுமுறை என்று அறிவித்துள்ளது பள்ளிக்கல்வித்துறை. இதனால் வருகிற ஞாயிற்றுக்கிழமை கட்டாயமான முறையில் பள்ளிகள் செயல்படும் என்றும் ஆனால் மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவித்து ...
அரியலூர் மாவட்டத்தில் உள்ள வடுகப்பாளையத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் தஞ்சை மாவட்டத்தில் உள்ள தனியார் கிறிஸ்தவ பள்ளியில் படித்து வந்தார். மேலும், விடுதியில் தங்கி படித்து வந்த அந்த மாணவி, கடந்த ஜனவரி 9-ஆம் தேதி பூச்சி மருந்தைக் குடித்த நிலையில் 19-ஆம் தேதி உயிரிழந்தார். இதனையடுத்து, மாணவி தற்கொலை செய்து கொண்ட ...
புதுடில்லி: சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ, இம்மாத இறுதியில் இந்தியா வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.கடந்த 2020ம் ஆண்டு மே மாதம் 5ம் தேதி,பாங்காங் ஏரி பகுதியில் பிரச்னை ஏற்பட்டது. பின்னர் ஜூன் 15ல் இந்தியா – சீனா ராணுவ வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். ...
கொரோனாவை மிகவும் திறமையாக கையாண்டதாக கூறிக்கொண்ட சீனா, ‘ஸ்டெல்த்’ எனப்படும் ஒமைக்ரான் கொரோனாவின் துணை வகை வைரஸால் ஆட்டம் கண்டுள்ளது. இன்று சீனாவில் 24 மணி நேரத்தில் 5,200 க்கும் மேற்பட்ட புதிய கொரோனா தொற்றுகள் பதிவாகியுள்ளன. சீனாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இது ஒமைக்ரானின் புதிய ...
சென்னையில் ரவுடிகள் ஒழிப்பு நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருவதாக மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். சென்னை: சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து நடத்தும் சிறப்பு சாலை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு இயக்கத்தை சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் இன்று(மார்ச் 15) தொடங்கி வைத்தார். அதன் பின் ...
சென்னை: திமுகவில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்த கே.பி.ராமலிங்கம், அக்கட்சியின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். திமுக மாநிலங்களவை முன்னாள் உறுப்பினராகவும், அக்கட்சியின் விவசாய அணி செயலாளராகவும் இருந்தவர் கே.பி.ராமலிங்கம். இவர், மத்திய, மாநில அரசுகள் கரோனா தடுப்புப் பணிகளை சிறப்பாக கையாண்டு வருவதாகவும், 144 தடை உத்தரவு நடைமுறையில் உள்ள நிலையில், அனைத்துக் கட்சிக் கூட்டம் தேவையில்லை ...
ஹிஜாப் வழக்கில் கர்நாடகா உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து செல்வதற்கு எதிராக ஒருதரப்பு மாணவர்கள் கடந்த மாதம் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதுமட்டுமல்லாமல், அங்குள்ள பல்வேறு கல்லூரிகளில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் காவித் துண்டை அணிந்து வந்து பரபரப்பை ஏற்படுத்தினர். ...
இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில காலமாக அதிகரித்திருந்த கொரோனா பாதிப்புகள் தற்போது வேகமாக குறைந்து வருகின்றன. கொரோனா பாதிப்புகள் படுவேகமாக குறைந்து வருகின்றது. கடந்த சில மாதங்கள் முன்னதாக 3 லட்சத்திற்கும் அதிகமாக பதிவான தினசரி பாதிப்புகள் தற்போது வேகமாக குறையத் தொடங்கியுள்ளன. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 2,876 பேருக்கு ...
சென்னையில் அண்மையில் தமிழக முதல்வர் ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார். அப்போது சிறப்பாக பணியாற்றிய ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு அவர் விருதுகளை வழங்கினார். மதுரை மாநகர் காவல் ஆணையர் பிரேமானந்த் சின்காவுக்கு சிறந்த பணிக்கான விருது கிடைத்தது. இதுகுறித்து காவல் ஆணையர் கூறியதாவது: மதுரை நகரில் குற்றங்களை தடுக்க 4 திட்டங்களை முன்னெடுத்தோம். பழைய ...
சென்னை: இந்திய மருத்துவத்துறையில் தமிழகம் முதன்மையான மாநிலமாக இருப்பதாகவும் இந்த சாதனை தொடரும் என்றும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினை இந்தியாவே பாராட்டுவதாக சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்றைய தினம் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் இந்தியாவில் மாநில ...