வழக்கு விவகாரத்தில் போலி கையெழுத்திட்டு பண மோசடி: புகாரளித்த வழக்கறிஞருக்கு கொலை மிரட்டல் – வழக்கறிஞர சாலையில் அமர்ந்து வழக்கறிஞர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கரைஞராக பணியாற்றி வருபவர் ராம். இவர் பல்வேரு சிவில் வழக்குகளில் மனுதாரர்கள் சார்பாக ஆஜராகி வருகின்றார். இன்னிலையில் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வரும் மீரா லோகநாதன், ராஜராஜேஷ்வரி, விஜயசந்திர லட்சுமி மற்றும் கிருஷ்ணாராஜ் ஆகியோர் இருவழக்குகளில் தனது கையெழுத்தினை போலியாக இட்டு வக்காளத்து மாற்றம் செய்ததோடு வழக்குகளில் தனது கையெழுத்தை போலியாக இட்டு சுமார் 20 லட்சம் வரை பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக பார் கவுன்சிலில் புகாரளித்தார்.
இது தொடர்பாக வழக்கறிஞர் கிருஷ்ணராஜ் தனியார் விடுதிக்கு இதுதொடர்பாக பேச அழைத்து கொலை மிரட்டல் விடுத்ததுடன் பார்கவுன்சிலில் கொடுத்த புகாரை திரும்பி பெற சொல்லியும் , புகாரை திரும்ப பெறவில்லை என்றால் கொலை செய்து விடுவதாக கூறி மிரட்டியுள்ளார். இதனையடுத்து தன் கையெழுத்தை போலியாக இட்டு பணமோசடியில் ஈடுபட்டதோடு கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வாயிலில் தனி ஆளாக சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்ததில் ஈடுபட்டார்.
இதனால் சுமார் 15 நிமிடங்கள் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் மோசடியில் ஈடுபட்டவர்கள் மீதும் தனக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தன் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் தனக்கு காவல்துறையினர் பாதுகாப்பளிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
Leave a Reply