வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை

வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை

கோவை பீளமேடு அடுத்த நேரு நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கப்பன் இவரது மனைவி புவனேஸ்வரி. வீட்டை பூட்டி விட்டு தனது அம்மா வீட்டிற்கு சென்று விட்டார் .வீட்டில் அருகில் வசிக்கும் அபிராமி என்ற பெண் புவனேஸ்வரி தொடர்பு கொண்டு வீட்டின் கதவு திறந்த நிலையில் இருப்பதாக கூறியுள்ளார். வீடு திரும்பிய அவர். வீட்டில் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது உள்ளே சென்று பார்த்த பொழுது தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் மற்றும் பணம் ஆகியவை கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது. இது குறித்து பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.