ஏழை மக்களுக்கான இலவச வீட்டு மனை பட்டா…. குமுரும் மக்கள்…!

 

ஏழை மக்களுக்கான இலவச வீட்டு மனை பட்டா…. குமுரும் மக்கள்…!

 

  • 2015ஆம் ஆண்டில் இருந்து கிடப்பில் போட்டு வைக்கப்பட்ட்டுள்ள ஏழை மக்களுக்கான இலவச வீட்டுமனை பட்டாவை காலம் தாழ்த்தாமல் உடனே வழங்க வேண்டும் என 100க்கும் மேற்போட்டோர் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

 

கோவை மதுக்கரையை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மக்கள் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர்.அந்த மனுவில்.மதுக்கரை பகுதியில் சுமார் 300 க்கு மேற்பட்ட தாழ்த்தப்பட்ட ஏழை மக்கள் வசித்து வருவதாகவும், கடந்த 20 ஆண்டுகளாக இலவச வீட்டுமனை பட்டா கேட்டு விண்ணப்பித்து இருந்ததாகவும்,கடந்த 2015 – ம் ஆண்டு மாவட்ட ஆட்சி தலைவரின் உத்தரவின் பேரில் மாவட்ட ஆதிதிராவிட நலதுறை அதிகாரிகள் அந்த பகுதியில் நேரில் விசாரணை மேற்கொண்டு ஏழை எளிய மக்களின் குடும்பங்களின் நிலை அறிந்து தேர்வு செய்து இலவச வீட்டுமனை பட்டாக்களை தயார் செய்து போட்டு வைக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரு சில தனி நபர்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்க கூடாது என கடந்த ஆட்சியில் தடுத்து வந்தனர் . கடந்த ஆறு ஆண்டுகளாக ஏழை மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் போட்டு வைக்கப்பட்டும் கிடப்பில் போடப்பட்டது.

இந்த நிலையில் போட்டு வைக்கப்பட்டு தயாராக உள்ள பட்டாக்களை உடனே வழங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.