கோவை மத்திய சிறை வளாகத்தில் சந்தன மரம் திருட்டு

கோவை மத்திய சிறை வளாகத்தில் சந்தன மரம் திருட்டு

கோவை நஞ்சப்பா சாலையில் மத்திய சிறைச்சாலை உள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் சிறைச்சாலையை சுற்றி
தீவிர போலீஸ் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு கோபுரங்கள் மூலம் போலீசார் கண்காணித்து வருகின்றனர். சிறைச்சாலையின் வளாகத்தில் ஏராளமான மரங்கள் செடிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. சிறைச்சாலை மைதானத்தில் ஒரு பகுதியில் தற்போது அரசு பொருட்காட்சி நடைபெற்ற வருகிறது. இந்நிலையில் சிறைச்சாலை வளாகத்தில் ஒரு பகுதியில் இருந்த நான்கு சந்தன மரங்கள் மர்ம நபர்கள் சிலரால் வெட்டி கடத்திச் செல்லப்பட்டுள்ளது. இது குறித்து கோவை மத்திய சிறைச்சாலையில் ஜெயிலர் சிவராசன் கோவை ரேஸ் கோர்ஸ் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.