கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த விவகாரம் – கோவையில் இயக்கப்படாத தனியார் பள்ளிகளிடம் விளக்கம் கேட்கப்படும்- மாவட்ட ஆட்சியர்

கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த விவகாரம் – கோவையில் இயக்கப்படாத தனியார் பள்ளிகளிடம் விளக்கம் கேட்கப்படும்- மாவட்ட ஆட்சியர்

 

கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, கோவையில் இயக்கப்படாத தனியார் பள்ளிகளிடம் விளக்கம் கேட்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

 

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரம் பெரும் போராட்டமாக மாறியுள்ள நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அப்பள்ளியின் வாகனத்தையும் பள்ளி பொருட்களையும் சேதப்படுத்தினர்.

 

இந்நிலையில், தனியார் பள்ளி கூட்டமைப்பு இன்று முதல் தனியார் பள்ளிகள் இயக்கப்படாது என அறிவித்தது. இந்நிலையில் அனுமதியின்றி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க கூடாது என மெட்ரிக் பள்ளி இயக்குநரகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் பெரும்பாலான பள்ளிகள் இயக்கப்பட்ட நிலையில் ஒரு சில பள்ளிகள் மூடப்பட்டது. கோவை மாவட்டத்தில் 15 தனியார் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் கருத்து கேட்ட போது பள்ளி கல்வித்துறை மூலம் இன்று இயக்கப்படாத பள்ளிகளிடத்தில் விளக்கம் கேட்கப்படும் என தெரிவித்தார். மேலும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கும் முடிவை பள்ளி கல்வித்துறை மேற்கொள்ளும் என கூறினார்.