கோவை மாவட்டம் கோட்டூர் அருகே உள்ள மலையாண்டி பட்டிணத்தை சேர்ந்த பிரபு (வயது 24). கூலித் தொழிலாளி. இவர் கடந்த 1 வருடங்களுக்கு முன்பு ஆனைமலையை சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்தார். பின்னர் பிரபு இளம்பெண் வீட்டில் தங்கி இருந்தார். அப்போது அவருக்கு இளம்பெண்ணின் 17 வயது தங்கையுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் ...

கோவை, சிங்காநல்லூர் எஸ்.ஐ .எச்.எஸ் காலனி, கருணாநிதி நகரை சேர்ந்தவர் மோகன் குமார் ( வயது 39 )இவர் அந்த பகுதியில் மெடிக்கல் ஸ்டோர் நடத்தி வருகிறார்.நேற்று இரவு 10.30 அளவில் இவரது கடைக்கு ஆட்டோவில் 4 பேர் கொண்ட கும்பல் சென்றது.அவர்கள் போதைக்கு பயன்படுத்தக்கூடிய வலி நிவாரண மாத்திரை உள்ளதா? என்று கேட்டனர். அதற்கு ...

கோத்தகிரி அருகே சோலூர்மட்டம் பகுதியை சுற்றி, குமரமூடி, கரீக்கையூர், அரக்கோடு, குள்ளங்கரை, முடியூர், வக்கனாமரம், மெட்டுக்கல் என 40-க்கும் மேற்பட்ட பழங்குடியின கிராமங்கள் உள்ளது. இந்த பகுதிகளில் அதிகளவிலான பலாமரங்கள் உள்ளன. தற்போது பலாப்பழ சீசன் என்பதால், பலாப்பழங்கள் அதிகளவில் காய்த்து தொங்குகின்றன. இந்த பழங்களை சாப்பிடுவதற்காக காட்டு யானைகள் அதிகளவில் வருகின்றன. யானைகள் நடமாட்டம் ...

அடக்குமுறையால் அச்சுறுத்தல் செய்யும் ஸ்டாலின் சர்வாதிகாரியாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த, பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கத்தை காவல்துறையினரை ஏவி, துன்புறுத்தி கைது செய்துள்ளதாக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கே.பி.ராமலிங்கம் செய்த தவறு என்ன? பாரத மாதா சிலைக்கு மாலை அணிவித்தது ஒரு குற்றமா? பாரதிய ஜனதா ...

ஓபிஎஸ் கருத்தை வரவேற்கிறேன் என்றும் எடப்பாடிபழனிசாமி ஒரு துரோகி என்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்  கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், சசிகலா டிடிவி தினகரன் உள்பட அனைவரையும் ஒருங்கிணைத்து கட்சியை வழி நடத்துவோம் என்று எடப்பாடி பழனிச்சாமிக்கு அழைப்பு ...

சென்னை: சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி ஏமாற்றுபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அண்மையில்கூட ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள், ஊழியர்கள், பிரபலங்கள், தொழில் அதிபர்கள், பணியாளர்கள் பெயரில் சம்பந்தப்பட்டவர்களின் புகைப்படத்துடன் முகநூல் (ஃபேஸ்புக்) கணக்கை கும்பல் ஒன்று தொடங்கியது. இதேபோல், வாட்ஸ்-அப்பிலும் அதிகாரிகளின் புகைப்படத்தை டி.பி.யாக வைத்து பணம் பறிக்கும் நிகழ்வுகளும் நடைபெற்றன. இந்த ...

டெல்லி: கொரோனா வைரஸ் காய்ச்சல் பாதிப்பு தலைநகர் டெல்லியில் அதிகரித்து வருகிறது. பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் சளி, காய்ச்சல், தொண்டை பிரச்சினையால் பலரும் மருத்துவமனையில் குவிந்து வருகின்றனர். 80 சதவிகித குடும்பத்தினர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளது சமீபத்தில் நடைபெற்ற சர்வேயில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. வட இந்தியாவில் காய்ச்சல், தொண்டையில் கரகரப்பு, ...

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவதூறாக பேசிய வழக்கில் கடலூர் நீதிமன்றத்தில் நாஞ்சில் சம்பத் ஆஜரானார். கடலூர் திருப்பாதிரிப்புலியூர் தேரடி தெருவில் கடந்த 21.1.2018 அன்று நடந்த அ.ம.மு.க. பொதுக்கூட்டத்தில், அப்போதைய கொள்கை பரப்பு துணை செயலாளராக இருந்த நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு பேசினார். அப்போது அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ...

திருப்பூர் : கோவை, திருப்பூர் உட்பட, தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் முத்திரை தாள் தட்டுப்பாடு நிலவுகிறது; தமிழக அரசு துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது.தமிழகத்தில் பதிவு துறையின் கீழ், 575 பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படுகின்றன. பதிவுத்துறை அலுவலகத்தில் சொத்து கிரயம் செய்வதற்கு, 5 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாய் ஆகிய மதிப்புள்ள ...

இரு மடங்கு பணம் தருவதாக கூறி சூப்பர் மார்க்கெட் உரிமையாளரிடம் ரூ.5 லட்சம் மோசடி கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஒடையகுளம் ஓ.எஸ்.பி. நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன்( 40). தொழில் அதிபரான இவர் ஒடையகுளத்தில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜேந்திரனுக்கு செல்போனில் ஒரு அழைப்பு வந்தது. ...