கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பக்கம் உள்ள பூலக்காடு, பெரியார் நகரைச் சேர்ந்தவர் மகாலிங்கம். இவரது மகள் மாலதி (வயது 19 )பல்லடத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் பி .காம். இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார் .இவருக்கு கடந்த 23 -7 -22 அன்று திருமணம் நிச்சயக்கப்பட்டது.அதன் பிறகு அவர் கல்லூரிக்கு செல்லவில்லை .இந்த நிலையில் கடந்த 17ஆம் தேதி மாலதி வீட்டில் இருந்து திடீரென்று மாயமாகிவிட்டார் .இது குறித்து அவரது தாயார் ஞானவல்லி கருமத்தம்பட்டி போலீசில் புகார் செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் ராஜதுரை வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்.
Leave a Reply