உடலில் மண் எண்ணெயை ஊற்றி தற்கொலைக்கு முயன்ற மாற்றுத் திறனாளியால் கோவை கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு..!

கோவை பதுவம்பள்ளி பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ராமசாமி வயது 47 கூலித் தொழிலாளி இவர் இன்று கோவை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தார்
அப்போது அவர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த மண் எண்ணெயை உடலில் ஊற்றினார் இதனை கண்ட அதிர்ச்செடைந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரை அடுத்து நிறுத்தி விசாரித்தனர். பின்னர் கலெக்டரிடம் மனு அளிக்க அழைப்பு சென்றனர்
அவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது
நான் அதே பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் தனது வீட்டு பத்திரத்தை மூன்று லட்சத்திற்கு அடகு வைத்தேன். பின்னர் அதற்கு மாதம் மாதம் அசலும் வட்டியும் சேர்த்து செலுத்தி வந்தேன
3 லட்சம் வாங்கிய கடனுக்கு 5 லட்சம் பணம் செலுத்தி விட்டேன் . இந்த நிலையில் அடகு வைத்த வீட்டு பாத்திரத்தை திருப்பி தராமல் மீண்டும் கூடுதலாக 3 லட்சம் பணம் கேட்டு வீட்டு பாத்திரத்தை தர மறுத்துவிட்டார்.
இதுகுறித்து பலமுறை கலெக்டரிடம் மனு அளித்து விட்டேன்
ஆனால் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை அவரவர் அந்த மனுவில் கூறியிருந்தார்