பள்ளிக்கூடம் அருகே பெட்டிக்கடையில் பீடி ,சிகரெட் விற்பனை- 3 பேர் கைது.

கோவை : பள்ளி- கல்லூரிகளுக்கு அருகில் பீடி ,சிகரெட் மற்றும்,தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது .இந்த நிலையில் பெரிய கடை வீதியில் உள்ள ஒரு மேல்நிலைப் பள்ளிக்கூடம் அருகே ஒரு பெட்டி கடையில் வைத்து பீடி சிகரெட் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக என்.எச்.ரோடு , திருமால் வீதியை சேர்ந்தார்பரீத் கான் (வயது74) கைது செய்யப்பட்டார் .அங்கிருந்த 14 பாக்கெட் பீடி சிகரெட்பறிமுதல் செய்யப்பட்டது. .இதே போல அதே தெருவில் பீடி ‘சிகரெட் விற்பனை செய்ததாக பி. கே .செட்டி வீதியைச் சேர்ந்த முகமது கபீர் (வயது55) கைது செய்யப்பட்டார் .இவரிடம் இருந்து 77 பாக்கெட் சிகரெட் 126 பண்டல் பீடி பறிமுதல் செய்யப்பட்டது.இதே போல கோட்டைமேடு வின்சென்ட் ரோட்டில் உள்ள ஒரு பள்ளிக்கூடம் அருகே பீடி -சிகரெட் விற்பனை செய்ததாக அதே பகுதியை சேர்ந்த முகம்மது ஜக்கரியா ( வயது 70 )கைது செய்யப்பட்டார். இவரிடமிருந்து மொத்தம் 550 பாக்கெட் பீடி – சிகரெட் கைப்பற்றப்பட்டது.மேலும் அந்த பகுதியில் திடீர் சோதனை நடந்து வருகிறது