சோமனூர் சௌடேஸ்வரி காலனியில் மதுபான கடை வேண்டுமென்றும்.. மதுபான கடை வேண்டாம் என்றும் இரு கோஷ்டிகள் கோவை ஆட்சியரிடம் மனு..!

சோமனூர் சௌடேஸ்வரி காலனி மதுபான கடை உள்ளது அங்கு வசிக்கும் பொதுமக்கள் மதுபான கடை வந்தால் முதியோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு கேள்விக்குறியாகி விடும் கடந்த 7.3.22 மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்து உள்ளோம் அதிகாரிகள் மதுபான கடை அங்கு வராது உறுதி அளித்துள்ள நிலையில் மது கடையை திறந்து உள்ளனர். இன்று பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மதுக்கடையை உடனடியாக மூட வேண்டும் என கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்

அதே போல அந்த பகுதியில் வசிக்கும் ஆண்கள் அந்தப் பகுதியில் மதுபான கடை வைக்க வேண்டும் அதனை 3 கிலோ மீட்டர் தொலைவில் அமைத்தால் எங்களால் மது வாங்கி குடிக்க முடியாது என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

மதுபான கடை வேண்டும் என்று ஒரு கோஷ்டினரும் மது கடை அகற்ற வேண்டும் என மறு கோ ஷ்டினரும் மனு அளித்தது குறிப்பிடத்தக்கது