கோவை பேரூரை அடுத்த பச்சாபாளையத்தில் சமையல் எண்ணை விற்பனை கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு நேற்று பெண் ஒருவர் வந்தார். அவர் அந்த கடையில் தன்னிடம் இருந்த ரூ.2 ஆயிரத்தை கொடுத்து 1 லிட்டர் எண்ணை வாங்கினார். கடையில் இருந்த பெண் வியாபாரி எண்ணைக்குறியான பணத்தை எடுத்து மீதி பணத்தை கொடுத்தார். பின்னர் அந்த ...
கோவை மாவட்டத்தில், கடந்த ஒரு மாதமாக வெயில், மழை, குளிர் என பருவநிலை மாறி மாறி வருகிறது. இதை மக்கள் பொருட்படுத்தாமல் இருப்பதால், காய்ச்சல், சளி, இருமல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பல்வேறு உடல் உபாதைகளுக்கு உள்ளாகின்றனர். மழைக்காலங்களில் அசுத்தமான குடிநீர் குடிப்பதாலும், மழைநீரில் நனைந்த உணவுகளை உண்பதாலும் சளி மற்றும் வயிற்றுப்போக்கு பிரச்சினை ஏற்படுகிறது.வைரஸ் ...
கோவை சரவணம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் நேற்று விளாங்குறிச்சி ரோட்டில் வாகன சோதனை நடத்தினார்.அப்போது அந்த வழியாக வந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினார். விசாரணையில் அவர் பிரபல வழிப்பறி கொள்ளையன் என்பது தெரியவந்தது.இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் கோவை மாநகரில் 3 வழிப்பறி வழக்குகளிலும், மாவட்டத்தில் 2 வழிப்பறி வழக்கிலும் சம்பந்தப்பட்ட ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி பல்லடம் ரோடு எஸ்.ஆர். லே- அவுட்டை சேர்ந்தவர் தேவராஜ் (வயது 58). சம்பவத்தன்று இவர் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அங்கு 2 இளம்பெண்கள் வந்தனர். அவர்கள் தேவராஜிடம் வீடு வாடகைக்கு உள்ளதா? என கேட்டனர். அதற்கு அவர் பதில் கூறி கொண்டு இருந்தார். திடீரென அந்த பெண்கள் தேவராஜின் முகத்தை ...
கோவையை சேர்ந்தவர் 22 வயது இளம்பெண். இவர் தனது குடும்பத்துடன் ஒரு நிறுவனம் நடத்தி வருகிறார் .இந்த நிறுவனத்தில் விருதுநகர் மாவட்டம் ,ராஜபாளையம் அருகே உள்ள முகவூரை சேர்ந்த அஜித்குமார் (வயது 26) என்பவர் எந்திரம் ஒன்றை விற்பனை செய்ய கொடுத்தார். அந்த எந்திரத்தை இளம்பெண் விற்பனை செய்து ரூ 1 லட்சத்து 65 ஆயிரத்தை ...
ரஷ்யா – உக்ரைன் இடையேயான போர் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி இன்னும் முடியாமல் தொடர்கிறது. உக்ரைனின் நான்கு நகரங்களைக் கைப்பற்றிய ரஷ்யா, அவற்றைத் தன்னுடன் இணைத்துக் கொண்டதாக அறிவித்தது. மேலும், தேவை ஏற்பட்டால் அணு ஆயுதத்தையும் பயன்படுத்துவோம் எனவும் எச்சரித்திருந்தது. இதற்கிடையே ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே நிரந்தர அமைதிக்கு மத்தியஸ்தம் செய்ய இந்திய பிரதமர் ...
மும்பையில் திடீரென 144 தடை (ஊரடங்கு) உத்தரவை வரும் 4-ம் தேதி முதல் 2023, ஜனவரி 2ம் தேதிவரை பிறப்பித்து மும்பை போலீஸார் உத்தரவிட்டுள்ளனர். மும்பையில் அமைதியை நிலைநாட்டவும், பொதுஅமைதிக்கு குந்தகம் விளைவிக்காமல் எந்த தொந்தரவும் வரக்கூடாது என்பதற்காக இந்த ஊரடங்கு உத்தரவை போலீஸார் பிறப்பித்துள்ளனர். இந்த உத்தரவின்படி, மும்பை நகரில் 5 நபர்கள் அதற்கு ...
அகமதாபாத்: குஜராத்தில் இரண்டாம் கட்ட தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது. 182 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு இரு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. அதன்படி 89 தொகுதிகளுக்கு முதல் கட்ட தேர்தல் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. மீதம் உள்ள 93 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்ட தேர்தல் நாளை மறுநாள்( 5ம் தேதி) நடைபெற உள்ளது. ...
அன்னூர் விவசாய நிலத்தை அரசு கையகப்படுத்த அரசு ஆணையை பிறப்பித்ததை ரத்து செய்யக்கோரி டிசம்பர் 7-ம் தேதி பாஜக சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. மீளுமிந்த போராட்டத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்கிறார். இதுகுறித்த அறிவிப்பில், அன்னூரில் 3731.57 ஏக்கர் விவசாய நிலத்தை கையகப்படுத்த விவசாயிகள் எதிர்ப்பையும் மீறி திமுக அரசாணை பிறப்பித்துள்ளது. அதன் தொடர்ச்சியாக ...
பாகிஸ்தானுக்கு கச்சா எண்ணெயில் 30-40 சதவீதம் தள்ளுபடி வழங்க ரஷ்யா மறுத்துவிட்டது. அப்படியொரு சலுகை வழங்கப்பட மாட்டாது என்று ரஷ்யா தெளிவாகக் கூறியதால், பாகிஸ்தான் தூதுக்குழு வெறுங்கையுடன் திரும்ப வேண்டியதாயிற்று. பாகிஸ்தானின் பெட்ரோலியத்துறை அமைச்சர் முசாதிக் மாலிக் தலைமையிலான குழு நவம்பர் 29ஆம் தேதி ரஷ்யா சென்றது. இந்த தூதுக்குழு நவம்பர் 30 அன்று ரஷ்ய ...













