கோவை கல்லூரி பேராசிரியை வீட்டில் தங்க, வைர நகைகள் கொள்ளை..!

கோவை ஜி.சி.டி.கல்லூரி ரோடு அம்மன் கோவில் வீதியில் உள்ள ஒரு தனியார் அப்பார்ட்மெண்டில் வசிப்பவர் ஷோபா ( வயது 60) இவர் துடியலூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் துணை பேராசிரியையாக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் கல்லூரிக்கு சென்று விட்டார் .மாலையில் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் பீரோவில் இருந்த 10 பவுன் தங்க நகைகள், வைர கம்மல்,வைர மோதிரம் ஆகியவற்றை காணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர். இது குறித்து ஷோபா சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்துள்ளார் . போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.