கோவை போத்தனூர் அருகே உள்ள சீனிவாசன் நகரை சேர்ந்தவர் ராமசாமி இவரது மனைவி மயிலாத்தாள் (வயது 69) இவர் நேற்று காந்திபுரம் மத்திய பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக நின்று கொண்டிருந்தார். அப்போது இவரது பையில் இருந்த பணம் ரூ.50 ஆயிரம், மற்றும் 4 சேலைகள் , ஒரு செல்போன் ஆகியவற்றை யாரோ திருடி விட்டனர் .இது குறித்து மயிலாத்தாள் காட்டூர் போலீசில் புகார் செய்துள்ளார்.சப் இன்ஸ்பெக்டர் பழனிசாமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.