கோவை புலியகுளம் மசால் லேஅவுட் சேர்ந்தவர் சுஜித். தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி பிரித்தி (வயது 23) இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. நேற்று இரவு இவர் தனது கணவருடன் வீட்டு வராண்டாவில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது ஒரு ஆசாமி வீட்டினுள் புகுந்து பிரித்தியின் பின்பகுதியை தட்டினார் .உடனே பிரித்தி எழுந்து சத்தம் போட்டார். அதற்குள் அந்த ஆசாமி.ஓடிவிட்டார். பக்கத்து வீட்டில் வசிக்கும் தர்ம ராஜ் தான் இதை செய்ததாக அவரது மனைவி புகார் செய்தார். தர்மராஜ் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் , மானபங்கம் ஆகிய பிரிவின் கீழ்வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கணவருடன் தூங்கி கொண்டிருந்த மனைவியிடம் சில்மிஷம்-பக்கத்துவீட்டு வாலிபர் மீது இளம்பெண் புகார்..!!

Leave a Reply