கோவை: தர்மபுரி மாவட்டம் பிடம நேரியை சேர்ந்தவர் செந்தில். இவரது மகள் நவநீதா (வயது 17) இவர் பீளமேட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி .காம். முதலாம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி விடுதியில் தங்கி இருந்தார். இவருக்கு கல்லூரி விடுதியில் தங்கி இருந்து படிக்க பிடிக்கவில்லை. இதை தனது பெற்றோர்களிடம் கூறினார் .இதையடுத்து அவரது பெற்றோர்கள் கல்லூரிக்கு அருகில் மற்றொரு பெண்கள் தங்கும் விடுதியில் தங்கி இருக்க ஏற்பாடு செய்து கொடுத்தனர்.இந்த நிலையில் கடந்த 3-ந்தேதி நவநீதா தன் உறவினர்களுக்கு போன் செய்து எலி மருந்து தின்றுவிட்டதாகவும், இதைதன் பெற்றோர்களுக்கு தெரிவிக்க வேண்டாம் என்று கூறினார்.இதைய டுத்து அவரை சிகிச்சைக்காக பீளமேட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர் .அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இறந்தார். இது குறித்து தந்தை செந்தில் பீளமேடு போலீசில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.