வாலிபரை கல் வீசி தாக்கிக் கொலை முயற்சி – நண்பனுக்கு வலைவீச்சு..!

கோவை ராமநாதபுரம் நாகலிங்க தேவர் விதியை சேர்ந்தவர் செல்வம். அவரது மகன் ராஜா ((வயது 22) கூலித்தொழிலாளி.இவர் நேற்று தனது நண்பரான அதே பகுதியைச் சேர்ந்த பெருமாள் என்பவருடன் சேர்ந்து மது அருந்தினார். பின்னர் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது .இந்த நிலையில் நேற்று மதியம் ராஜா ராமநாதபுரம் திருச்சி ரோட்டில் கே.டி.சி .லாரி டிரான்ஸ்போர்ட் அலுவலகம் அருகே நடந்து சென்றார் .அப்போது பெருமாள் இவரை வழிமறித்து கல்லாலும், தடியாலும் தாக்கினாராம். இதில் பலத்த காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக ராஜாவை கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து ராஜா ராமநாதபுரம் போலீசில் புகார் செய்தார் .சப் இன்ஸ்பெக்டர் குணசேகரன் பெருமாளை கைது செய்தார். இவர்மீது கொலை முயற்சி உட்பட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்.