கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள வெள்ளியங்காடு பூமாதேவி நகரை சேர்ந்தவர் நித்யா (வயது30) இவருக்கும் செந்தில் என்பவருக்கும் கடந்த 16 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது .14 வயதில் கவதமி என்ற மகள் உள்ளார். கடந்த 10ஆண்டுகளுக்கு முன்பு கணவர் செந்தில் இறந்துவிட்டார். இதனால் நித்யா வெள்ளியங்காட்டை சேர்ந்த கோபிநாத் என்பவரை 2 -வது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ரோகித் என்ற ஆண் குழந்தை உள்ளது. நித்யாவின் மகள் கவுதமி செந்தில் அம்மா வீட்டில் வளர்ந்து வந்தார். மேலும் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் 9 – ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில கவுதமியின் தாத்தா- பாட்டி கடந்த ஜனவரி மாதம் இறந்துவிட்டனர் .இதனால் கவுதமி மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததோடு தாய் நித்யாவுடன் இருந்து வந்தார் .இந்த நிலையில் கவுதமி தோட்டத்தில் உள்ள கிணற்றில் குதித்து நேற்று தற்கொலை செய்து கொண்டார் .இது குறித்து மேட்டுப்பாளையம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி பிணத்தை மீட்டனர் பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.இது குறித்து காரமடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Leave a Reply