கோவையில் கஞ்சா விற்ற வடமாநில வாலிபர்கள் 3 பேர் கைது..!

கோவை மாவட்டம்.கருமத்தம்பட்டி அருகே உள்ள கணியூர் வேட்டைக்காரன் குட்டையில் வட மாநிலத்தவர்கள் கஞ்சா விற்பனை செய்வதாக கருமத்தம்பட்டி போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில், காவல் ஆய்வாளர் ராஜதுரை தலைமையிலான போலீசார், ஆதவன் மில் அருகே சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இதில் ஒடிசாவைச் சேர்ந்த பனமாலை கன்கார், திகம்பர் கண்கார்,தீபக் பிரதான் ஆகியோர் கையில் வைத்திருந்த சிறிய பையை சோதனை செய்து பார்த்ததில் அதில் அரை கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களை கைது செய்தனர். 3 பேரும் அங்குள்ள மில்லில் வேலை செய்து வந்தனர். பின்னர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.