டாஸ்மாக் கடையை மூடக்கோரி கோவையில் பா.ஜ.க ஆர்ப்பாட்டம்- பெண்கள் உட்பட 99 பேர் கைது..!

கோவை வைசியாள் வீதியில் உள்ள டாஸ்மாக் கடையை (எண் 1702)மூடக்கோரி பாஜகவினர் ராஜ வீதியில் உள்ள தேர்நிலை திடல் அருகே நேற்று மாலை அனுமதி பெறாமல் ஆர்ப்பாட்டம் செய்ய முயன்றனர்.அங்கு சென்ற வெரைட்டி ஹால்ரோடு போலீசார் ஆர்ப்பாட்டம் நடத்திய உக்கடம் டிவிஷன் பாஜக நிர்வாகி சேகர் உட்பட 99 பேரை கைது செய்தனர்.இவர்களில் 30 பேர் பெண்கள் ஆவார்கள் இவர்கள் மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவர்கள் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.