ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 7 பவுன் தங்க நகைகள் திருட்டு..!

கோவை அருகே உள்ள வேடப்பட்டி , அய்யாவு நகரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் உடல்நிலை சரியில்லாமல் ராமநாதபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றார்.அவரது மனைவி கற்பகமும் உடன் சென்றார்.அப்போது டாக்டர்கள் அவருக்கு ஸ்கேன் எடுப்பதற்கு பரிந்துரை செய்தனர்.இதை யடுத்து அவர் அணிந்திருந்த 7 பவுன் எடை கொண்ட செயின் ‘மோதிரம் ஆகியவற்றை கழற்றி தன் மனைவியிடம் கொடுத்திருந்தார். மனைவி கற்பகம் அதை ஒரு பர்சில் போட்டு வைத்திருந்தார் .பின்னர் மதிய உணவு சாப்பிடுவதற்காக லட்சுமி மில் பகுதியில் உள்ள ஒரு ஒட்டலுக்கு டவுன் பஸ்சில் சென்றனர். அப்போது இவரது பர்சில் இருந்த 7 பவுன் தங்க நகைகளை யாரோ திருடி விட்டனர். இது குறித்து கற்பகம் ராமநாதபுரம் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.