திமுக அரசை கண்டித்து சேலம் ஆத்தூரில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம். திமுக அரசை கண்டித்து சேலம் ஆத்தூரில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. பால்விலை, சொத்துவரி, மின்கட்டண உயர்வை கண்டித்து அதிமுகவினர் முழக்கம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திமுக அரசை கண்டித்து மாநகராட்சி நகராட்சிகளில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், ...
இந்தியாவில் ஒவ்வொரு கிராமத்திலும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் கிளையை உருவாக்க வேண்டும், ஒவ்வொரு உறுப்பினரும் நாட்டின் வளர்ச்சிக்காக பங்களிப்பு செய்ய வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் தெரிவித்தார். அசாமில் உள்ள ஆர்எஸ்எஸ் அமைப்பின் சார்பில் 3 நாட்கள் பயிலரங்கு குவஹாட்டியில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கடைசி நாளான நேற்று ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் ...
சேலம்: மேட்டூர் அணையின் நீர் வரத்து 7,600 கன அடியில் இருந்து 11,600 கன அடியாக அதிகரித்துள்ளது. மாண்டஸ் புயல் கரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதியல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது .மேட்டூர் அணை உள்ளிட்ட இடங்களீல் மழை பெய்து ...
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை காக்க, பிரதமர் மோடியைக் கொல்லத் தயாராக இருங்கள் என சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மத்தியப்பிரதேச முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராஜா பட்டேரியாவை மத்தியப் பிரதேச போலீஸார் இன்று கைது செய்தனர். தாமோ மாவட்டத்தில் உள்ள ஹதா நகரில் உள்ள அவரின் வீட்டில் ராஜா பட்டேரியா இருந்தபோது இன்று அவரை ...
அருணாச்சல பிரதேசத்தில் இந்திய – சீன வீரர்களிடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக முப்படை தளபதி அனில் சுவுகான் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை நேரில் சந்தித்து வீரர்கள் தாக்கப்பட்டது குறித்து விளக்கமளித்தார். அவசர ஆலோசனைக்கு அழைப்பு விடுக்கப்பட்டதன் பேரில் ராஜ்நாத்சிங் வீட்டிலேயே இந்த ஆலோசனை நடைபெற்றது. இதற்கிடையே, சீன எல்லையில் இந்திய வீரர்கள் ...
திருவண்ணாமலை அருகே, மனைவி, மகன் மற்றும் 4 மகள்கள் உள்ளிட்ட 6 பேரை வெட்டிக் கொலை செய்த கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த ஒரந்தவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி (40). இவருடைய மனைவி வள்ளி. இந்தத் தம்பதிக்கு திரிஷா (15), மோனிஷா (14), சிவசக்தி ...
தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு வேண்டி அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு வேண்டி அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும், நடிகருமான சரத்குமார் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், போதைப் பொருட்கள் பள்ளி சிறுவர்களை சென்றடைவது வருத்தமாக ...
சபரிமலையில் சுவாமி தரிசன சீசன் தொடங்கியுள்ள நிலையில் பலரும் மாலை போட்டு தினம்தோறும் ஐயப்ப தரிசனத்திற்காக வந்த வண்ணம் உள்ளனர். டிசம்பர் மாத தொடக்கம் முதலாக பக்தர்கள் வருகையால் தரிசனத்திற்கு ஒரு நாளைக்கு 1.20 லட்சம் பேர் முன்பதிவு செய்து தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டிருந்தது. இதனால் நாள்தோறும் அதிகமான பக்தர்கள் கூட்டம் வருவதால் தரிசன நேரத்தை ...
அபாயகரமான 6 பூச்சிக்கொல்லிகளை 60 நாட்களுக்கு தடை செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அபாயகரமான 6 பூச்சிக்கொல்லிகளை 60 நாட்களுக்கு தடை செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தற்கொலைகளை தடுக்கும் வகையில் 6 அபாயகரமான பூச்சிக்கொல்லி மருந்துகளை தடை செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், 3% மஞ்சள் பாஸ்பரஸ்ஸை பூச்சிக்கொல்லியாக பயன்படுத்த ...
கர்நாடகாவில் முதல்முறையாக ஜிகா வைரஸால் 5 வயது சிறுமி பாதிக்கப்பட்டுள்ளார். கர்நாடகாவின் ராய்ச்சூர் மாவட்டத்திலுள்ள 5 வயது சிறுமி, ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் தெரிவித்தார். அவரது ரத்த மாதிரியை ஆய்வு செய்த புனே சோதனைக்கூடம் அதனை உறுதி செய்தது என்று அவர் மேலும் தெரிவித்தார். இது குறித்து பயப்படத்தேவையில்லை என்றும் ...













