கோவையில் வீட்டில் விறகு அடுப்பில் சாராயம் காய்ச்சிய நபர் கைது – 1 லிட்டர் சாராயம் பறிமுதல்

கோவையில் வீட்டில் விறகு அடுப்பில் சாராயம் காய்ச்சிய நபர் கைது – 1 லிட்டர் சாராயம் பறிமுதல்

கோவை எட்டி மடையைச் வெள்ளிங்கிரி, கூலி தொழிலாளியான இவர், குடி பழக்கத்திற்கு அடிமையானதால்,வேலை இன்றி சுற்றித் திரிந்த வெள்ளிங்கிரி, பலரிடம் கடன் கேட்டும் பணம் கிடைக்காததால், விரக்தியினால் வீட்டிலேயே மதுபானம் செய்ய முடிவு செய்து, வீட்டில் உள்ள விறகடுப்பில் சாராயம் காட்சியதால், ஏற்பட்ட நச்சு காற்றின் காரணமாக, அருகில் இருந்தவர்கள், போலீசில் புகார் கொடுத்தனர், இதனைத் தொடர்ந்து அங்கு வந்த கந்தே கவுண்டன் சாவடி போலீசார், வெள்ளிங்கிரி வீட்டை சோதனை செய்து அங்கிருந்த ஒரு லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர் இதனைத் தொடர்ந்து அவர் கைது செய்யப் பட்டு அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது