கார் வெடி விபத்து பற்றி டுவிட்டரில் அவதூறு: கைதான கிஷோர் கே சாமியை விசாரிக்க 6 மணி நேரம் கோவை சைபர் கிரைம் போலீஸார் விசாரணை 

கார் வெடி விபத்து பற்றி டுவிட்டரில் அவதூறு: கைதான கிஷோர் கே சாமியை விசாரிக்க 6 மணி நேரம் கோவை சைபர் கிரைம் போலீஸார் விசாரணை 

கோயம்புத்தூர் கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக சமூக வலைதளத்தில் அமைதியை குலைக்கும் வகையில் பதிவிட்ட கிஷோர் கே.சாமி என்பவர் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து நேற்று சென்னையில் கைது செய்தனர். இதனையடுத்து கோவை 4 ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சரவணபாபு முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தினர்.

இந்திய தண்டனைச் சட்ட பிரிவு 153 இன் கீழ் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை காவலில் எடுத்து விசாரிக்க 4 ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதியிடம் மனு தாக்கல் செய்தனர். இதனையடுத்து அவரிடம் ஆறு மணி நேரம் விசாரணை நடத்த நீதிபதி சரவணபாபு உத்திரவிட்டார். இதனையடுத்து போலீசார் அவரை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று உடற் பரிசோதனை செய்து, கோவை மாநகர சைபர் கிரைம் அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணையை தொடங்கினர். குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு

கலகம் செய்வதற்கு தூண்டி விட்டு அதனால் கலகம் ஏற்பட்டால் அந்தக் கலகத்தைத் தூண்டியவருக்கு ஓர் ஆண்டுக்கு மேற்படாத சிறைவாசம் அல்லது அபராதம் அல்லது சிறைவாசம் அபராதமும் தண்டனையாக விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில் சைபர் கோவை சைபர் கிரைம் போலீசார் அரசு மருத்துவமனையில் உடல் பரிசோதனை செய்து கோவை மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் அலுவலகத்தில் தற்பொழுது விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.