கோவை மத்திய சிறையில் ஐந்து குண்டுகள் வீசி, பயங்கர ஆயுதங்களுடன் தாக்கி வார்டன் கொலை வழக்கு: குற்றவாளி தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றம் அறிவிப்பு

கோவை மத்திய சிறையில் ஐந்து குண்டுகள் வீசி, பயங்கர ஆயுதங்களுடன் தாக்கி வார்டன் கொலை வழக்கு: குற்றவாளி தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றம் அறிவிப்பு

கடந்த 1996 ஆம் ஆண்டு முஸ்லிம் சிறைவாசிகளான சித்தி ஓசிர் மற்றும் வேறு சில முஸ்லிம் சிறைவாசிகளை பார்க்க சென்ற சம்சுதீன் மற்றும் சில முஸ்லீம் நபர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கப்பட்டதாலும், சிறையில் இருந்து மற்ற முஸ்லிம்களை சில வாரங்கள் மோசமாக நடத்தியதாக கூறி கோவை மத்திய சிறையில் உள்ள சில வார்டன்கள் மீது முன் விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் அப்பாஸ் என்ற ஊசி அப்பாஸ், அபு என்ற அபுதாகிர், சமசுதீன் மற்றும் ராஜா (எ) டெய்லர் ராஜா ஆகியோர் கடந்த 1996 ஆம் ஆண்டு ரேஸ்கோர்ஸ் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நஞ்சுண்டாபுரம் சாலையில் உள்ள கோவை மத்திய சிறையில் உள்ள டி.ஐ.ஜி அலுவலகத்திற்கு சென்று அங்கு பணியில் இருந்த வார்டன் பூபாலன் மீது 5 பெட்ரோல் குண்டுகளை வீசி வெடிக்க செய்தும், ஆயுதம் கொண்டு தாக்கியதில் பூபாலனுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். பின்பு அவர் 1996 ஆம் ஆண்டு சிகிச்சைக்காக பலனின்றி இறந்து விட்டார். இது தொடர்பாக ரேஸ் கோர்ஸ் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் இந்த வழக்கு கோவை சிறப்பு புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டது. மேலும் குற்றவாளிகள் மீது 1998 ஆம் ஆண்டு கோவை ADJ – 4 நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. பின்பு மூன்று குற்றவாளிகள் இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். மேலும் நான்காவது குற்றவாளி தெற்கு உக்கடம் பிலால் நகரை சேர்ந்த ராஜா என்ற டெய்லர் ராஜா வருகின்ற 23 12 2022 ஆம் தேதிக்குள் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற எண் 3 ல் ஆஜராக வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.