4 வயது சிறுவன் உயிரிழப்புக்கு மருத்துவமனை காரணமல்ல-அமைச்சர் மா.சுப்பிரமணியனின் விளக்கம்..!

சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனையில் தாடகை வளர்ச்சி குறைபாடு காரணமாக அனுமதிக்கப்பட்ட மூன்றை வயது சிறுவன் உயிரிழந்ததால் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுக்க மருத்துவர்கள் பரிந்துரைத்த நிலையில் சிறுவன் அதற்கு ஒத்துழைப்பு கொடுக்காததால் பெற்றோர்கள் அனுமதி உடன் மயக்க மருந்து செலுத்துதியாக கூறப்படுகிறது.

சிறுவன் மயக்கம் அடைந்த நிலையில் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கும் போது உயிரிழந்ததாக தெரிய வருகிறது. மருத்துவர்கள் சிகிச்சையின் போது சிறுவன் உயிரிழந்ததால் பெற்றோர்களும் உறவினர்களும் அரசு மருத்துவமனை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் “எழும்பூர் அரசு மருத்துவமனைக்கு வந்ததால் குழந்தை இறந்ததாக சொல்லுவது தவறானது. குழந்தை பிறந்து 4 ஆண்டுகள் ஆகிறது. சிறிய தாடை பெரிய நாக்குடன் 4 ஆண்டுகளாக குழந்தை உயிரோடு போராடிக் கொண்டிருந்தது. அந்தக் குழந்தைக்கு அறுவை சிகிச்சை கூட செய்யவில்லை ஸ்கேன் மட்டுமே செய்துள்ளனர்” என விளக்கம் அளித்துள்ளார். சிறுவனுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளவில்லை என்றால் எதற்காக மயக்க மருந்து கொடுக்கப்பட்டது. சிறுவனுக்கு எந்த மாதிரியான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது, சிறுவனுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் சந்தேகம் எழுவதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.