1997 ஆம் ஆண்டு கோவை குண்டு வைத்த வழக்கு: தலைமறைவு குற்றவாளி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு

1997 ஆம் ஆண்டு கோவை குண்டு வைத்த வழக்கு: தலைமறைவு குற்றவாளி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு

கடந்த 1997 ஆம் ஆண்டு, கோவை உக்கடம் பகுதியில் பணியில் இருந்த காவலர் செல்வராஜ் என்பவர், அல் உம்மா எதிரிகளால் கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து கோவையில் பல்வேறு இடங்களில் கலவரம் வெடித்தது, கலவரத்தில் பல இஸ்லாமியர்கள் உயிரிழந்தனர், இதற்கு பழி வாங்கும் விதமாக , கோவை அரசு மருத்துவமனை எதிரே உள்ள கிளாசிக் கார்டன் அடுக்குமாடி குடியிருப்பின் கீழ் உள்ள கார் பார்க்கிங் ஏரியாவில் வெடிகுண்டு வைத்தது தொடர்பாக, 12 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு, 11 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இவ் வழக்கின் 12 வது குற்றவாளி முஜீபுர் ரகுமான் என்பவர் நீண்ட நாட்களாக தலைமறைவாக உள்ளார், இந்நிலையில், கோவை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் – 3 ல், வரும் 23 ஆம் தேதிக்குள், ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது, மேலும், தலை மறைவாக உள்ள குற்றவாளி குறித்த நோட்டீஸ்கள், அவரது வீட்டிலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் ஒட்டப்பட வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.