ஆந்திராவில் செம்மரம் வெட்டி கடத்தல்: 12 தமிழர்கள் உள்பட 16 பேர் கைது- 49 டன் செம்மரக் கட்டைகள் பறிமுதல் ..!

மராவதி: ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டி கடத்த முயன்றதாக தமிழ்நாட்டை சேர்ந்த 12 கூலி தொழிலாளர்கள் உள்பட 16 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் செம்மரக்கடத்தல் நடைபெறுவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. அங்கு விரைந்த செம்மர கடத்தல் தடுப்பு அதிரடி பிரிவு போலீசார் அங்கிருந்த ஒரு லாரியை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர்.

அதனை சோதனையிட்ட போது செம்மரக்கட்டைகள் இருந்தது தெரியவந்தது. 2 கார், லாரி மற்றும் அதிலிருந்த 49 டன் செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்த போலீசார் 16 பேரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 12 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். கைது செய்தவர்களில் கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர்கள் 9 பேர், திருவண்ணாமலையை சேர்ந்தவர்கள் 2 பேர், சேலத்தை சேர்ந்தவர் 1 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். லாரியை விரட்டி சென்ற போது போலீசாருக்கு லேசான காயம் ஏற்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.