கோவை அரசு அலுவலகங்களில் வெட்டி கடத்தப்படும் சந்தன மரங்கள்: அதிகாரிகளும், பொதுமக்களும் அதிர்ச்சி

கோவை அரசு அலுவலகங்களில் வெட்டி கடத்தப்படும் சந்தன மரங்கள்: அதிகாரிகளும், பொதுமக்களும் அதிர்ச்சி

கோவை விளாங்குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் அருகே உள்ள கால்நடை மருத்துவமனையில் சந்தத மரங்கள் வெட்டி கடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே ஒரு மரம் வெட்டி கடத்தப்பட்ட நிலையில் மற்றொரு மரம் பாதி வெட்டப்பட்டு நிலையில் உள்ளது. இதற்கு அரசு அதிகாரிகள் வனத்துறையிடம் புகார் கூறினார்களா ? அல்லது கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனரா என சந்தேகம் பொதுமக்களிடையே எழுந்துள்ளது. இந்நிலையில் அங்க வெட்டப்பட்ட மரங்களின் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து வனத்துறையினர் வழக்கு பதிவு செய்து மரங்களை கடத்தியவர் மீது நடவடிக்கை எடுப்பார்களா ? வெட்டப்பட்ட நிலையில் கிடக்கும் மற்றொரு மரத்தை காப்பாற்றுவதற்க்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா ? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.