தமிழக – கேரள எல்லையான மாங்கரை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாகவும், அதற்காக வேறு பகுதியிலிருந்து கஞ்சாவை வாங்கிச் செல்ல அன்னூர் பகுதிக்கு சிலர் வர உள்ளதாக அன்னூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அன்னூர் பேருந்து நிலையம், மேட்டுப்பாளையம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ...

கோவை ரத்தினபுரி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். அப்போது ரத்தினபுரி சம்பத் வீதி பகுதியில் உள்ள சுடுகாடு அருகே சந்தேகத்திற்கிடமான வகைகள் நின்று கொண்டு இருந்தவர்களை பிடித்து சோதனை நடத்தினர். அப்போது அவர்களிடம் அறுவை சிகிச்சையின் போது பயன்படுத்தப்படும் வலி நிவாரண மாத்திரைகளை போதை மாத்திரைகளாக பயன்படுத்த விற்பதற்காக நின்று கொண்டு இருந்தது ...

பிரதமர் மோடியின் திறன் இந்தியா திட்டத்தின் கீழ் 280 இடங்களில் தேசிய தொழிற்பயிற்சி மேளா நடத்தப்படுகிறது. தொழில் வாய்ப்புகள், தொழில் நேரடி செயல் முறை பயிற்சிகளை ஊக்குவிக்க திறன் இந்தியா திட்டம் எனப்படும் ஸ்கில் இந்தியா மிஷன் பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் திறன்மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அதன் ...

சென்னை: ஐபோன் தயாரிப்பில் கோலோச்சி வரும் தைவானின் பெகாட்ரான் நிறுவனம், தமிழ்நாட்டில் தனது தொழிற்சாலையைத் தொடங்கியுள்ளது. ரூ.1,100 கோடி முதலீட்டில் தொடங்கப்பட்ட இத்தொழிற்சாலையின் மூலம் 14 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்க உள்ளதுதான் ஹைலைட். செங்கல்பட்டு மாவட்டம், மகேந்திரா வேர்ல்ட் சிட்டியில் அமைந்துள்ள பெகாட்ரான் நிறுவனத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். அரசோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் ...

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் எலந்தூர் கிராமத்தில் அண்மையில் 2 பெண்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்டதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. போலீஸார் அங்கு சென்று விசாரணை நடத்தியதில் 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. இதுகுறித்து கொச்சி போலீஸ் கமிஷனர் சி.எச்.நாகராஜு கூறியதாவது: கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்தவர் பகவால் சிங். இவரிடம் ...

தமிழக காவல்துறையின் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி! தமிழகம் முழுவதும் ஆப்ரேஷன் மின்னல் ரவுடி வேட்டை மூலம் மூன்று நாட்களில் கொலை முயற்சி மற்றும் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு வந்த 3,095 ரவுடிகளை தமிழக காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் தேசிய புலனாய்வு அமைப்பினர் பல்வேறு கைது நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதன் காரணமாக தமிழக ...

தமிழ்நாட்டில், ஆன்லைன் சூதாட்டங்களில் சிக்கிப் பலர் பணத்தை இழந்து தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன. ஆன்லைன் சூதாட்டத்தின்மீதான மோகம் காரணமாகப் பணத்தை இழக்கும் இளைஞர்கள், மன விரக்தியில் விபரீத முடிவெடுக்கின்றனர். தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டங்களுக்குத் தடைவிதிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாள்களாக முன்வைக்கப்படுகிறது. இந்த நிலையில், கடந்த ஜூன் 6-ம் தேதி ...

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழையால், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று காலையில் விநாடிக்கு 35 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து, மாலையில் 28 ஆயிரம் கனஅடியாக சரிந்தது. தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் நேற்று முன்தினம் மாலை நீர்வரத்து விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக இருந்தது. நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழையால், நேற்று காலை ஒகேனக்கல்லுக்கு வரும் ...

உக்ரைனின் 4 பிராந்தியங்களை ரஷ்யா தன்னுடன் இணைத்த விவகாரத்தில் ரஷ்யாவுக்கு எதிராக இந்தியா வாக்களித்துள்ளது. உக்ரைனில் மீண்டும் போர் தீவிரமடைந்திருக்கும் நிலையில், நேற்று முன்தினம் அடுத்தடுத்து 80-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை செலுத்தி ரஷ்யா தாக்குதல் நடத்தியது. முன்னதாக போரில் உக்ரைனில் இருந்து ஆக்கிரமித்த டோனெட்ஸ்க், லுஹான்க்ஸ், கெர்சான் மற்றும் ஜபோரிஸ்சியா ஆகிய 4 பிராந்தியங்களை தன்னுடன் ...

ராமேஸ்வரம்: பாம்பன் சாலை பாலத்தில் அரசு பேருந்தும், தனியார் பேருந்தும் மோதி விபத்துக்குள்ளானதில் ஐந்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். முன்பகுதி அப்பளம் போல நொறுங்கிய நிலையில் அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் பேருந்தை உள்ளூர் மக்களே மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ராமேஸ்வரம் அருகே உள்ள பாம்பன் பாலம் வரலாற்று சிறப்பு மிக்கது. இந்த பாலத்தில் நின்று கடலின் அழகை ...