கோவை: கேன்சர் நோயாளிகளின் சிகிச்சைக்கு உதவ, நிதி திரட்டும் வகையில் கோவையில் மராத்தான் போட்டி, வரும் 11-ந் தேதி நடக்கிறது.இப்போட்டி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. போட்டியில் பங்கேற்க, 16 ஆயிரத்து 500 போட்டியாளர்கள் பதிவு செய்துள்ளனர். ஆண்கள், பெண்கள், முதியவர் மற்றும் சிறுவர்களுக்கு, 5கி.மீ., 10கி.மீ., மற்றும் 21கி.மீ., ஆகிய 3 பிரிவுகளில், போட்டி நடத்தப்படுகிறது.
இதற்கான டி-சர்ட் மற்றும் பதக்கம் வெளியீடு நிகழ்ச்சி தனியார் மாலில் உள்ள அரங்கில் நடந்தது. இதில், கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், மற்றும் தனியார் அமைப்பினர் டி- சர்ட் மற்றும் பதக்கங்களை வெளியிட்டனர்.
நிகழ்ச்சியில் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறும்போது மராத்தான் போட்டியில் நானும் பங்கேற்று, 21கிமீ., ஓட முயற்சி செய்கிறேன் என்றார்.
Leave a Reply