கன்னியாகுமரி அருகே நடுக்கடலில் வைத்து இருதரப்பு மீனவர்கள் இடையே ஏற்பட்ட தகராறில், ஒரு தரப்பினர் நாட்டு வெடி குண்டு வீசியது தொடர்பாக 37 பேர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கன்னியாகுமரி: சின்ன முட்டம் மீன் பிடி துறைமுகத்திலிருந்து 5 விசைப்படகுகள், இழுவலைகள் மூலம் இடிந்தரைக் கடற்கரையிலிருந்து, சுமார் 8 கடல் மைல் ...
மக்களவையில் மத்திய அரசு மீது குற்றச்சாட்டிய திமுக எம்.பி. கனிமொழிக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். இதுக்குறித்து அவரது டிவிட்டர் பக்கத்தில், திமுக அரசியல்வாதிகள், கட்சிக் கூட்டங்கள் என்று நினைத்து பொய்களைப் பரப்புவதற்கும், உண்மைகளை திரித்துக் கூறுவதற்கும், நாடாளுமன்ற அரங்கைப் பயன்படுத்துவது வழக்கம். திமுக எம்பி கனிமொழியும் நேற்று மக்களவையில் தனது கட்சியின் ...
புதுடெல்லி: ‘மோடி மீதான இந்தியாவின் நம்பிக்கை என்பது எதிர்க்கட்சிகளின் புரிதலுக்கு அப்பாற்பட்டது’ என்று நாடாளுமன்ற மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் இன்று உரை நிகழ்த்தினார். அப்போது, ”நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் ஆற்றிய உரையின் மூலம் குடியரசுத் தலைவர் திரவுபதி ...
ஆப்ரேஷன் தோஸ்த்’ என்ற பெயரில் துருக்கி மற்றும் சிரியாவுக்கு மீட்பு படைகளை இந்தியா அனுப்பியுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் உள்ள காஷியான்டெப் நகரில் நேற்று முன்தினம் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. அதை தொடர்ந்து 7.5 ரிக்டர் அளவில் மீண்டும் மற்றொரு ...
சென்னையில் சைபர் குற்றங்களைத் தடுக்க திறமையான இன்ஜினீயர்கள் தேவை என்று சென்னையில் உள்ள எத்திராஜ் கல்லூரியில் டி.ஜி.பி சைலேந்திரபாபு பேசியுள்ளார். சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில், “Cyber Security Challenges in Modern Era” என்ற தலைப்பில் நேற்று கருத்தரங்கு நடந்தது. இந்த கருத்தரங்கில் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் ...
லக்னோ பெயர் விரைவில் மாற்றப்படும் என உத்திரபிரதேச துணை முதலமைச்சர் அறிவித்துள்ளார். உத்தர பிரதேச துணை முதலமைச்சர் பிரஜேஷ் பதக் இன்று பதோஹி மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு திட்டங்கள் மற்றும் வளர்ச்சி பணிகள் பற்றி ஆய்வுக் கூட்டம் ஒன்றை நடத்தினார். அதன் பின் சூரியவா பகுதியில் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் சிலையை ...
கோவை அருகே உள்ள சூலூர் ,நரசிம்மமாமில் அருகே சூலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாதையன் நேற்று மாலையில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்கு சந்தேகம்படும்படி நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தார். அவரிடம் 18 கிலோ கஞ்சா சாக்லெட் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது . இவைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக திருப்பூர் மாவட்டம், பருவாய், ...
கோவை மாவட்டம் துடியலூர் காவல் நிலைய பகுதியில் கஞ்சாவை விற்பனை செய்த மதுரை மாவட்டத்தை சேர்ந்த கணேசன் மகன் ஜீவானந்தம் (வயது 25) என்பவர் கைது செய்யப்பட்டார் . இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் . மேலும் பொது ஒழுங்கு மற்றும் பொது சுகாதாரப் பராமரிப்பிற்கு பாதகமான செயலில் ஈடுபட்ட குற்றத்திற்காக ஜீவானந்தம் என்பவர் ...
கரூர் மாவட்டம் பாலக்காட்டுத்துறையை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் யுவராஜ் (வயது 18) இவர் மதுக்கரை அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று இவர் அங்குள்ள மாச்சி கவுண்டன்பாளையத்தில் ஒரு லாட்ஜ் அருகே நின்று கஞ்சா விற்று கொண்டிருந்தாராம். இவரை அந்த வழியாக ரோடு சுற்றி வந்த மதுக்கரை ...
கோவை: மதுரை – திருமங்கலம் ரெயில் நிலையங்கள் இடையே பொறியியல் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், கோவையில் இருந்து மதுரை, நாகா்கோவிலுக்கு இயக்கப்படும் ரெயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக ரெயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சேலம் ரெயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- பொறியியல் பராமரிப்பு பணி காரணமாக இன்று முதல் மாா்ச் 6-ந் ...













