பயணிகளின் கவனத்திற்கு… கோவையில் இருந்து இயக்கப்படும் மதுரை, நாகா்கோவில் ரயில்கள் பகுதியாக ரத்து..!

கோவை: மதுரை – திருமங்கலம் ரெயில் நிலையங்கள் இடையே பொறியியல் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், கோவையில் இருந்து மதுரை, நாகா்கோவிலுக்கு இயக்கப்படும் ரெயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக ரெயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சேலம் ரெயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பொறியியல் பராமரிப்பு பணி காரணமாக இன்று முதல் மாா்ச் 6-ந் தேதி வரை நாகா்கோவில் – கோவை ரெயில் (எண்: 16321) விருதுநகா் – கோவை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த நாட்களில் நாகா்கோவில் – விருதுநகா் இடையே மட்டுமே இந்த ரெயில் இயக்கப்படும். பிப்ரவரி 9-ந் தேதி முதல் மாா்ச் 6-ந் தேதி வரை கோவை – நாகா்கோவில் ரெயில் (எண்:16322) கோவை – விருதுநகா் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த நாட்களில் விருதுநகா் – நாகா்கோவில் இடையே மட்டுமே இயக்கப்படும். இன்று முதல் மாா்ச் 4-ந் தேதி வரை கோவையில் இருந்து பிற்பகல் 2.40 மணிக்கு புறப்படும் கோவை – மதுரை தினசரி ரெயில் (எண்: 16721) இன்று முதல் மாா்ச் 4-ந் தேதி வரை திண்டுக்கல் – மதுரை இடையே ரத்து செய்யப்படுகிறது. இந்த நாட்களில், கோவை – திண்டுக்கல் இடையே இந்த ரெயில் இயக்கப்படும். இன்று முதல் மாா்ச் 5-ந் தேதி வரை மதுரை – கோவை தினசரி ரெயில் ( எண்: 16722) மதுரை – திண்டுக்கல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. திண்டுக்கல் – கோவை இடையே மட்டும் இந்த ரயில் இயக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.