லக்னோ பெயர் விரைவில் மாற்றம்.!!

க்னோ பெயர் விரைவில் மாற்றப்படும் என உத்திரபிரதேச துணை முதலமைச்சர் அறிவித்துள்ளார். உத்தர பிரதேச துணை முதலமைச்சர் பிரஜேஷ் பதக் இன்று பதோஹி மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு திட்டங்கள் மற்றும் வளர்ச்சி பணிகள் பற்றி ஆய்வுக் கூட்டம் ஒன்றை நடத்தினார்.

அதன் பின் சூரியவா பகுதியில் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் சிலையை திறந்து வைத்தார்.

அப்போது லக்னோவின் பெயர் மாற்ற வேண்டும் என்ற பாஜக எம்பி கோரிக்கை பற்றி குறிப்பிட்டார். அதன் பின் லக்னோவை லக்ஷ்மன் நகரி என விரைவில் பெயர் மாற்றம் செய்வதற்கான சூழல் பற்றி ஆய்வு செய்து அடுத்த கட்ட தகவலை அரசு அளிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.